தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். நடிப்புக்காக தமிழில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது தனுஷ் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். ஹீரோ நடிகராக இருப்பதற்கு தமிழ் சினிமா கூறும் தகுதிகள் எதுவும் இல்லை என்று கூறி பலரும் தனுஷை விமர்சித்து வந்தனர். ஆனால் ஒரு நடிகனுக்கு நடிக்க தெரிந்தால் மட்டுமே போதும் என நிரூபித்து மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஒரு நடிகராக வலம் வந்துக்கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ் ஐஸ்வர்யா திருமணம்:
இதற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் தனுஷிற்கும் இடையே கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் செல்வாக்கு பெற்ற ஒரு நடிகராக மாறிவிட்டார் தனுஷ் என்றுதான் கூற வேண்டும்.
அதற்கு பிறகுதான் தனுஷ் தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். நானும் ரவுடிதான், விசாரனை, மாரி என பல படங்களை தயாரித்தார் தனுஷ். அவருக்கு தற்சமயம இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கு நடுவே தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராகவும் தனது பாதையை துவங்கினார்.
இயக்குனரான மனைவி:
2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இவரது இயக்கத்தில் 3 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் சில சர்ச்சைகளையும் உருவாக்கியது. அப்போதே சுருதி ஹாசன் மற்றும் தனுஷ் குறித்து சர்ச்சைகள் இருந்து வந்தன.
அதனை தொடர்ந்து வை ராஜா வை என்கிற திரைப்படத்தையும் இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
விவாகரத்து:
விவாகரத்து ஆன பிறகு இருவருமே தங்களுக்கு வேறு ஜோடிகளை தேடிக்கொள்ள போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா தனுஷ் தனிமையில் இருப்பது குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.
எனவே தனுஷிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து வைத்திருப்பதாகவும் ஏற்கனவே பெண் வீட்டாரோடு பேச்சு வார்த்தையெல்லாம் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுக்குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.