Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நயன்தாரா அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..? சும்மா தெறிக்குமே..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா.

குறிப்பாக இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் .

இவர் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி மொழி படங்களில் நடித்து அங்கு நட்சத்திர நடிகையாக தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

நயன்தாரா:

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முதல் தொகுப்பாளினியாக கேரளாவில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

--Advertisement--

அதன் மூலம் அவருக்கு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பின்னர் தமிழுக்கு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ஹோமிலியான தோற்றம், லட்சணமான முக ஜாடை கொண்ட பெண் என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

நயன்தாரா அடுத்ததாக தன்னுடைய இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுக திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது. இப்படத்தின் மூலம் நயன்தாராவுக்கு ஒரு மிகப்பெரிய பிராண்ட் மட்டும் அடையாளமாக அமைந்துவிட்டது.

சந்திரமுகி திரைப்படம் நயன்தாராவுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போலவே அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

நயன்தாராவின் வெற்றி படங்கள்:

தொடர்ந்து கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி , குசேலன், ஏகன் ,ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நயன்தாரா நடித்த வந்தார்.

இதனிடையே சில காலம் காதல் சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமானார். இதனால் அவர் சில காலம் சினிமா பக்கமே தலை காட்டாமல் ஒதுங்கியிருந்தார்.

பின்னர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மாபெரும் வெற்றியை படைத்தார்.

அதை எடுத்து தொடர்ந்து மீண்டும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பம், எதிர்நீச்சல், இது கதிர்வேலன் காதல், மாஸ் என்கிற மாசிலாமணி , தனி ஒருவன், நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஆன விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் குவியும் வாய்ப்புகள்:

இவர்களுக்கு இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து பிஸியாக நடித்த நட்சத்திர நடிகை அந்தஸ்திலிருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் நடிகர் யாஷின் அடுத்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க கமிட் ஆக இருக்கிறார்.

ஆம் நடிகர் யார் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலமாக உலக புகழ் பெற்ற நடிகராக பார்க்கப் பட்டவர்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா தற்போது கமிட்டாக இருப்பதால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

கே.ஜி. எஃப் ஹீரோவுக்கு ஜோடியாகும் நயன்தாரா:

இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்ஸிக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் கே. ஜி . எஃப் படத்தை போன்றே மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்.

மேலும், உலகப் புகழ் பெற்ற படமாக மாறும் என்பதால் நயன்தாரா நடிப்பு இப்படத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top