விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன் .. அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன்… அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

மலையாள சினிமாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல நடிகைகள் இன்று கோலிவுட்டையே ஆக்ரமித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்துள்ளனர். அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருப்பவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

lakshmi menon

பவயமான முகத்தோற்றத்துடன் பருவ வயது பெண்ணாக இருக்கும்போதே தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். மேக்கப் இல்லாத இயற்கையான முகதோற்றத்துடன் நடித்து தான் அவர் ஒட்டுமொத்த கோலிவுட் இளசுகளையும் தன் வசப்படுத்தினார்.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் படத்தின் மூலம் தமிழில் வாய்ப்புகள் தேடி வர சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படிங்க : அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு… படப்பிடிப்பு தளத்தில் காஜல் அகர்வாலின் அந்த உறுப்பை கடித்த இளம் நடிகர்…

நடிகை லட்சுமி மேனன் துபாய் கலைஞரான ‘ராமகிருஷ்ணன்’ மற்றும் நடன ஆசிரியர் ‘உஷா’ ஆகியோரின் மகள் என்பதால் பிறவியில் இருந்தே அவருக்கு நடனம் வந்துவிட்டது. 2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரின் பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தான் மலையாள இயக்குநர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.இவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்தது. பின்னர் படவாய்ப்புகள் சரியாக அமையாததால் சில நாட்கள் மார்க்கெட் இழந்தார். அதன் பின் கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே பாண்டிய நாடு திரைப்பதில் நடித்து நடிகர் விஷால் உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அவரை திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக கூட கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், அந்த வதந்திக்கு விஷால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் 2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதான் இவர்களின் காதல் கிசு கிசுவுக்கு தீனி போட்டது.

இதையும் படிங்க : விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன்… அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

இந்நிலையில் தற்போது மீண்டும் லட்சுமி மேனன் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை லட்சுமி மேனன் விவாகரத்தான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தொழிலதிபர் ஏற்கனவே பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

lakshmi menon

இதனை அறிந்த ரசிகர்கள் விவாகரத்து ஆனவரை திருமணம் செய்து கொள்கிறாரா லட்சுமி மேனன்..? அதுவும் பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒருவரையா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்..? என்று உச் கொட்டி வருகின்றனர். இந்த தகவல் தீயாய் பரவி கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மறுபக்கம் நடிகை லட்சுமி மேனன் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத போது இப்படி வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் லட்சுமிமேனன் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கருத்து கூறி வருகின்றனர் ரசிகர்கள்.