நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு பெருகி விட்டது. குறிப்பாக நடிகர், நடிகைகளில் அந்தரங்க வாழ்க்கை என்பது மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது.

இது இன்று அல்ல, நேற்று அல்ல கடந்த 50 ஆண்டு கால சினிமா வரலாறும் அப்படித்தான் இருந்திருக்கிறது. பத்திரிகைகளோ, ஊடகங்களோ இல்லாத அந்த காலகட்டத்தில் வெளிச்சத்துக்கு வராமல் போன திரைக்கலைஞர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் ஏராளம்.

உதாரணமாக எம்ஜிஆர் சிவாஜி வரிசையில் இருந்த ஜெமினி கணேசனுக்கு 4 மனைவிகள், இதில் நான்காவது மனைவியை அவர் திருமண செய்த போது அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் இப்போதைய சில நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

விஜய் – சங்கவி

அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது,

நடிக்க வந்த புதிதில் நடிகர் விஜய், சங்கவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஆனால் எஸ்ஏ சந்திரசகேர் இதை கண்டித்த பிறகுதான் சங்கவியின் தொடர்பை விட்டு நடிகர் விஜய் விலகினார்.

இதையும் படியுங்கள்:  விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

சரத்குமார் – தேவயானி

நடிகர் சரத்குமார், 2 படங்களில் தேவயானியுடன் நடித்தார். அவர்கள் 2 பேருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. ஆனால் தேவயானி அம்மா, சரத்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதால், அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

சரத்குமார் – நக்மா

அடுத்து, அஜீத்குமாரை காதலிப்பதற்கு முன் நடிகை ஹீராவை நினைத்து உருகினார் சரத்குமார். ஆனால் ஹீரா திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. மற்றதுக்கு சம்மதித்தார். பிறகு நக்மாவுடன் சரத்குமார் நடித்த வகையில் அவருடன் சில காலம் வாழ்க்கை நடத்தினார் சரத்குமார். ஆனால் திருமணத்துக்கு அவர் சம்மதிக்காததால் கடைசியில் ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகர் விஜயகாந்த், தன்னுடன் முதலில் 2 படங்களில் நடித்த பூர்ணிமா என்ற நடிகையுடன் நெருக்கமாக இருந்தார். கொட்டிவாக்கத்தில் அவருக்கு பங்களா வாங்கிக்கொண்டு அவருடன் சில ஆண்டுகள் இருந்தார். சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றும் வைத்துக்கொடுத்தார்.

பிறகு நடிகை ராதிகாவுக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றது. ஆனால் ராதிகா ஏற்கனவே 2 திருமணமானவர் என்பதால் விஜயகாந்த் வீட்டில் சம்மதிக்கவில்லை.

சியான் விக்ரம்

சியான் விக்ரம் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது அந்த வேலையை கனகச்சிதமாக பேசி முடித்துக்கொள்வார். அத்துடன் விலகி விடுவார். கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்ள மாட்டார்.

இதையும் படியுங்கள்: விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

ஓட்டாத குதிரையே இல்லை

பிரசாந்த், ஓட்டாத குதிரையே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் நிறைய நடிகைகளை வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி, நட்சத்திர இரவு நடத்த சென்ற போது பல நடிகைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்.

அந்த பாவம்தான், வினைதான் அவருக்கு கிரகலட்சுமி ரூபத்தில் மனைவியாக வந்து, திருமணமாகியும் இப்போது தனி மனிதராக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

சிம்பு

பிரபு குஷ்பு கதை எல்லோரும் அறிந்த கதைதான். பழசை எல்லாம் கிளற வேண்டாம் அண்ணே என்று பிரபுவே என்னிடம் ஒருமுறை கேட்டுக்கொண்டார்.

இந்த வரிசையில், நடிகர் சிம்பு என்றாலே நடிகைகள் மடங்கி விடுவர். ஏனெனில் அந்த விஷயத்தில் அவர் கில்லாடியாக இருந்து வருகிறார். நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி என பல பேருடன் குடும்பம் நடத்தி விட்டார் என்று கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இப்படி நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் பற்றி பேச ஆரம்பித்தால் லிஸ்ட் பெருசா போகுதே என்கிற வகையில் அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.