Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சமந்தா எல்லாம் ஓரமா போ.. புஷ்பா பாட்டுக்கு 47 வயசு நடிகையின் ஆட்டத்தை பாருங்க..!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமாகி பின்னாளில் நட்சத்திர ஹீரோயினாக ஜொலித்தவர் நடிகை மீனா.

முதன்முதலில் இவர் நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

குழந்தை நட்சத்திரமாக நடிகை மீனா:

அதன் பின்னர் தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். குறிப்பாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இன்று வரை பலரது ஃபேவரட்டாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ரஜினிகாந்தாகவே நடித்திருப்பார்.

---- Advertisement ----

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரமாக மீனா அந்த படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பின்னாலில் ரஜினிகாந்த் ஜோடியாக முத்து திரைப்படத்தில் அவர் நடித்தது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் மீனா பிரபலமான நடிகையாக தென்பட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வானத்தைப்போல, முத்து, மாயி, மரியாதை , பொற்காலம், பெரியண்ணா, நாம் இருவர் நமக்கு இருவர், நாடோடி மன்னன், எஜமான் , என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக கோலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை மீனா.

வெற்றி நாயகியாக வலம் வந்த மீனா:

மீனா திரைப்படங்களின் நடிக்கிறார் என்றாலே அவர்களுடன் நடிக்கும் ஹீரோக்கள் அந்த படம் நிச்சயமாக ஹிட் அடித்து விடும் என நம்பிக்கையுடன் மீனாவுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் ஹீரோக்கள் படங்களில் கமிட்டான உடனே தயாரிப்பாளர்களிடம் மீனாவை ஹீரோயினாக போடுங்கள் என கேட்பார்களாம்.

அந்த அளவுக்கு மீனா ராசியான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வந்தார். தற்போது 47 வயதாகும் மீனா இன்னும் மார்க்கெட் குறையாமல் பிரபல நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு. பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களது திருமணத்திற்கு நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி வாழ்த்தி இருந்தார்கள். அதன் பிறகு இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் பிறந்தார்.

நைனிகா விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து அசதி இருந்தார்.

தெறி திரைப்படத்தில் விஜய்க்கு ஈடாக ஈடு கொடுத்த நடித்த நைனிகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கினர்.

தெறி பேபியின் அறிமுகம்:

குறிப்பாக அவர் தெறி பேபியாகவே ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார். இப்படியாக மீனாவின் வாழ்க்கை குழந்தை கணவர் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்து விட்டார். கணவரின் மரணத்திலிருந்து மீள முடியாத மீனா சில நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

அப்போது அவருக்கு திரை துறையை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது ஆறுதல்களை நேரில் சென்று தெரிவித்தனர்.

இதையடுத்து மீனா மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் அவரது மறுமணம் குறித்த பல வதந்தி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக அவர் நடிகர் தனுஷை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல்வேறு வதந்தி செய்திகள் வெளியானது.

சமந்தா பாடலுக்கு ஜாலி ஆட்டம்:

ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி என மீனா நிரூபித்து காட்டினார். இப்படியான நேரத்தில் மீனா. கோடை விடுமுறையை முன்னிட்டு ப்ளூ லகூன் ஐஸ்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.

அங்கு அவர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டு அதனை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமந்தா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற புஷ்பா பாடலுக்கு அவர் ரீல்ஸ் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மீண்டும் மீனாவை மகிழ்ச்சியாக பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top