Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா.. தீயாய் பரவிய தகவலுக்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க..!

Tamil Cinema News

தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா.. தீயாய் பரவிய தகவலுக்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க..!

திரைத்துறை வாரிசு குடும்ப பின்பலம் ஏதும் இல்லாமல் தனது முயற்சியால் மட்டும் திரைத்துறையில் அறிமுகமான எத்தனையோ நடிகர்கள்…

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகை ரேஞ்சிக்கு உயர்ந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: அடிபட்டும் திருந்தல.. மீண்டும் நைட் பார்ட்டியில் விடிய விடிய பஜனை.. அதுவும் அந்த நடிகரோட..

இப்படி தனது திறமையை மட்டும் நம்பி முன்னுக்கு வரும் சிலர் நடிகைகளை குறித்து மிகவும் மோசமான கருத்துக்களையும் கீழ்த்தரமான செய்திகளையும் வெளியிட்டு…

நடிகை ஸ்ரீபிரியங்கா:

அவர் இப்படிப்பட்டவர் தான் என்பதை சித்தரித்து விடுகிறார்கள். குறிப்பாக நடிகைகள் படவாய்ப்பிற்காக தயாரிப்பாளர் இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பட வாய்ப்பை பெற்றிருப்பார் என்றெல்லாம் பேசத் தொடங்கி எழுதுகிறார்கள்.

--Advertisement--

இதனால் நடிகைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். குறிப்பாக திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் வளர்ந்து வரவேண்டும் என முனைப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு இது மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்: சங்கீத ஜாதி முல்லை நடிகர் கண்ணன் தற்போதைய நிலை தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஸ்ரீ பிரியங்கா வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் முகமாகப்பட்ட நடிகையாக இருந்து வருகிறார்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது வளர்ச்சி குறித்தும் திரைப்பட வாய்ப்புகள் குறித்தும் கேட்டதற்கு அவர் தெளிவான விளக்கம் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது முதலில் நான் ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன் நான் எந்த ஒரு தயாரிப்பாளரோ , இயக்குனரோ அல்லது மேலாளர் கட்டுப்பாட்டிலோ இருக்கவே இல்லை.

திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். அதை நல்ல முறையில் தேடியும் வருகிறேன்.

சுதந்திரமான நடிகை நான் .அதனால் இதுவரை எந்த ஒரு தப்பும் செய்யவில்லை. என்னுடைய நடிப்பையும் என்னுடைய நடத்தையும் யாரும் குறை சொல்லும் அளவுக்கு நான் நடந்து கொண்டது இல்லை.

இனியும் அப்படித்தான் இருப்பேன் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் என் மனதிற்கு பிடித்த எந்த பிரச்சனையும் இல்லாத பட வாய்ப்புகளை மட்டும் தான் ஒப்புக்கொண்டு நடிப்பேன்.

இதையும் படியுங்கள்: டைவர்ஸ் ஆகி பல வருடம் ஆச்சு.. மீண்டும் இணையும் பார்த்திபன் சீதா.. இது தான் காரணமாம்..!

அது மட்டும் இன்றி அட்ஜஸ்ட்மென்ட்டிற்காக பட வாய்ப்புகள் பெறுகிறேன் என்று பலன் என்னை பற்றி மிகவும் ஏளனமாக பேசுகிறார்கள்.

அது உண்மையே இல்லை. நான் அப்படி பட வாய்ப்பு பெற்று தான் முன்னுக்கு வர வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணத்திலும் சினிமாவில் நுழையவே இல்லை.

தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருக்கேன? ஸ்ரீபிரியங்கா பளார்!

எனது திறமை மட்டும் நம்பி நான் சினிமாவிற்கு வந்திருப்பவள். அதனால் எனது திறமையின் மூலமாக மட்டுமே பட வாய்ப்புகளை பெற்று அதன் மூலம் பிரபலமாவதையே நான் பெருமையாக கருதுகிறேன் என ஸ்ரீ பிரியங்கா அந்த பேட்டியில் கூறினார்.

ஸ்ரீ பிரியாங்காவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த அதிரடியான போல்டான கருத்துக்கு பலரும் ஆதரவு கூறியிருக்கிறார்கள்.

தயவுசெய்து மற்றவர்கள் சொல்வது எல்லாம் கேட்டு நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். நீங்கள் தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் என அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top