13 வயசில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. வெறுப்பில் தான் நடித்தேன்.. நடிகை சுகன்யா..!

1991 ஆம் ஆண்டு பொது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுகன்யா. இவர் தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஆனால் தமிழில்தான் அதிகபட்சமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தன்னுடைய மூன்றாவது திரைப்படத்திலேயே விருதுகளை வாங்கினார் நடிகை சுகன்யா.

முதல் பட வாய்ப்பு:

1992 ஆம் ஆண்டு அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம்தான் அது அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சின்ன கவுண்டர் அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது.

1992 முதல் 1996 வரை சுகன்யாவிற்கு அதிகமான வாய்ப்புகள் வந்த காலகட்டம் என்று கூறலாம். அந்த காலகட்டங்களில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் மிக சின்ன வயதிலேயே திரைப்படங்களில் நடிப்பதற்கு வந்த நடிகைகளில் சுகன்யாவும் முக்கியமானவர்.

---- Advertisement ----

சிறு வயதிலேயே சினிமா:

அவர் தனது 12 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார். தமிழுக்கு நிகரான அளவில் மலையாளத்திலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சுகன்யா. தெலுங்கில் ஒன்பது திரைப்படங்களிலும், கன்னடத்தில் இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் ஒரு சில பாடல்களையும் பாடி இருக்கிறார் சுகன்யா. இந்த நிலையில் சின்ன கவுண்டர் படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் சுகன்யா பகிர்ந்து இருந்தபோது சில சுவாரஸ்யமான விஷயங்களை அதில் கூறியிருந்தார்.

சின்ன கவுண்டர் அனுபவம்:

1992 ஆம் ஆண்டு சின்ன கவுண்டர் திரைப்படம் வெளியானது. அதில் நடிக்கும் பொழுது சுகன்யாவிற்கு 13 வயது தான் ஆகியிருந்தது என்று அந்த பேட்டியில் கூடி இருக்கிறார். அந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்கிறேன் என்று எனக்கு தெரியாது பாதி படம் முடிந்த பிறகு தான் அதில் நான் கதாநாயகி என்பதே எனக்கு தெரியும் என்கிறார் சுகன்யா.

அந்த படத்தில் ஒரு காட்சியில் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விடுவது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியை படமாக்கும்போது மிகவும் பயமாக கூச்சமாக இருந்தது. நான் முதலில் அதில் நடிக்கவே மாட்டேன் என கூறினேன்.

என் தொப்புளில் ரிகர்சல் பார்க்கும்போதே அங்கு மூன்று உதவி இயக்குனர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது என் கூட நடித்த நடிகை அனு ஹாசன் கூறும்போது ஒரு சில விஷயங்களுக்கு அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என கூறினார்.

காட்சியாக வரும்போது இயக்குனர் ஆர்.வி உதயக்குமார் அந்த காட்சியை ஆபாசமாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும் வகையில் கொண்டு வந்திருந்தார் என்கிறார் சுகன்யா.

---- Advertisement ----