வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..?

வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..?

தமிழ், தெலுங்கு படங்களில் தோன்றி அசத்திய அம்மு அபிராமி தமிழ் திரைப்படமான பைரவா திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷுடன் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார்.

இதையும் படிங்க: நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..!


தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்து அளவு திரைப்படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் ராட்சசன் என்ற படத்தில் 2018-ஆம் ஆண்டும் அசுரன் என்ற படத்தில் 2019-ஆம் ஆண்டு முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார்.

அம்மு அபிராமி..

ரசிகர்களால் பெரிதளவு விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவரான இவர் என் ஆளோட செருப்ப காணோம் என்ற படத்தில் 2017-ஆம் ஆண்டும், தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் அதே ஆண்டும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய யார் இவர்கள் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானார்.


மேலும் 2019-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டார்.

ஓரினச் சேர்க்கை குறித்த கருத்து..

சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் நடித்து வரும் படங்களில் குடும்பப் பாங்காகவும், நம் வீட்டுப் பெண் போல இருக்கக்கூடிய இவர் தற்போது அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதால் கூடுதல் கிளாமர் உடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

தற்போது இவர் நடிப்பில் வெளி வந்த கண்ணகி திரைப்படம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அண்மையில் பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.


வெளங்கிடும் கேட்டா..

இந்த பேட்டியில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஆனது இவர் படத்தில் பேசி நடித்த டயலாக்கில் ஒரு பால் தன் பாலின ஈர்ப்பாளர் என்ற ஒரு வசனம் பேசி இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு தக்க பதில் அளித்து இருக்கிறார் அம்மு அபிராமி.

அந்த பதிலில் இவர் சொல்லும் போது தற்போது உலகில் எல்லோரும் முற்போக்கை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார்கள். காதல் என்றால் அது காதல் தான். அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது.

காதல் எப்போதும் உண்மையாக இருந்தால் போதும். காதல் ஒரு குறிப்பிட்ட பாலினத்தவரை தான் பார்த்து வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே அந்த வசனத்தை பேசியதற்கு நான் எதற்காக வெட்கப்பட வேண்டும்.

இந்த வசனத்தை பேசியதற்காக என்றுமே நான் வெட்கப்பட்டது கிடையாது. இதில் ஒரு தவறும் இல்லை என்ற உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்.


இதனை அடுத்து ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொன்ன பதிலை கேட்டு வெளங்கிடும் என்று ரசிகர்கள் நக்கலாக பேசி வருகிறார்கள். அத்தோடு அவர் மிக தைரியமாக பதிலளித்திருப்பதை வரவேற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்கள்..!

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி காட்டு தீ போல் பரவி வருவதோடு அம்மு அபிராமியின் பேச்சினை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.