நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..!

நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ரஞ்சிதா 90 காலகட்டங்களில் ரசிகர்கள் விரும்பும் கனவு தேவதையாக வலம் வந்தவர்.

இவர் தமிழ் திரையுலகில் இயக்குனர் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பாரதிராஜா இயக்கிய தமிழ் படமான நாடோடி தென்றல் மூலம் தனது நடிப்பு பணியை சீரும் சிறப்புமாக ஆரம்பித்தார்.

நடிகை ரஞ்சிதா..

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று சினிமாவில் ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.


பாரதிராஜாவின் நாடோடி தென்றல் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் இவர் தமிழில் அதர்மம், நாடோடி தென்றல், ஜெய்ஹிந்த், அமைதிப்படை, தோழர் பாண்டியன், கருப்பு நிலா, கர்ணா, சின்ன வாத்தியார், மக்களாட்சி, பெரிய மருது, பொம்மலாட்டம் போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்புகளை காட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் ஆஞ்சநேயலு, குபேரலு, மாவிச்சிகுரு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ரஞ்சிதாவின் வாழ்க்கை வரலாறு..

1991-ஆம் ஆண்டு நடிப்புத் துறையில் களம் இறங்கியவர் 2001-ஆம் ஆண்டு வரை நடித்துக் களைகட்டி இருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் தனது ஆதிக்கத்தை காட்டிய அற்புத நடிகையாக விளங்குகிறார்.

இதனை அடுத்து ராணுவ மேஜர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் சில ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று இந்த ஜோடி பிரிந்து விட்டது.


இதனை அடுத்து 2003-ஆம் ஆண்டு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக செகண்ட் இன்னிசை ஆரம்பித்த இவர் 2010-ஆம் ஆண்டு வரை சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து அசத்தினார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சின்னத்திரைகளிலும் தலைகாட்டி வந்த இவர் 2013-ஆம் ஆண்டு சுவாமி நித்தியானந்தாவின் பக்தையாக மாறியதை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது.

யாருக்கும் தெரியாத ரகசிய தகவல்கள்..

அந்த விமர்சனங்களை பற்றி எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் இருக்கும் இவர் தற்போது வரை நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஒருவராகவே வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கட்டாயப்படுத்தி ஹிஜாப் போடா சொல்ட்றாங்களா..? நீச்சல் உடையில் மும்தாஜ் சொல்லும் உண்மை..

மேலும் இணையங்களில் வெளி வந்த சுவாமி நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவின் படுக்கையறை காட்சிகள் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது.


சன் டிவியில் வெளி வந்த எந்த காட்சிகள் புனையப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவால் கூறப்பட்ட நிலையில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து அந்த வீடியோ காட்சிகள் உண்மை என கோர்ட் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் ஊடகத்துறை நுழைந்தது தவறு என்பதால் ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்கும் படி கோர்ட் உத்தரவிட்டது. திரையுலகில் மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்த இவரது பெயர் நித்தியானந்தா விஷயத்தில் டேமேஜ் ஆனது.

இதையும் படிங்க: ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!

இதனை அடுத்து ரஞ்சிதாவின் பெற்றோர் தன் மகளை தங்களிடம் ஒப்படைக்கும் படி சொல்லியும், அதற்கு செவி சாய்க்காமல் ரஞ்சிதா இன்று வரை நித்யானந்தாவோடு தான் இருந்து வருகிறார்.

தற்போது ரஞ்சிதாவின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் சிறந்த நடிகையாக விளங்கிய இவர் ஏன் இப்படி தடம் மாறிப் போனார். உண்மையில் நித்தியானந்தாவின் உண்மை முகம் என்ன? என்பது இன்று வரை தெரியாத நிலையில் எதை உண்மை என்று நம்புவது என்று தெரியாமல் இருப்பதாக கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.