கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!

கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!

குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் சில நடிகைகள், அடுத்த சில ஆண்டுகளில் படங்களில் நாயகியாக நடிக்க வந்து விடுகின்றனர். அட அந்த படத்தில் சிறுமியாக இருந்த பெண்ணா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டாலும், அதிர்ச்சியடைந்தாலும் அதுதான் உண்மை.

மீனா

உதாரணமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அடுத்த சில ஆண்டுகளில் என் ராசாவின் மனசிலே படத்தில், ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

என்றும் அன்புடன், சதிலீலாவதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகா, அடுத்து தங்கர்பச்சான் இயக்கிய அழகி படத்தில் நாயகியாக நடித்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஷாலினி

சங்கர் குரு, ரோஜா சின்ன ரோஜா படத்தில் நடித்த பேபி ஷாலினி, பின்னாளில் காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இப்போது அஜீத்குமாரின் மனைவியாக இருக்கிறார்.

அதே போல் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆர்த்தி, இப்போது வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி நடிப்பில் ஆர்த்தி அசத்தி வருகிறார்.

இப்படி பல முன்னணி நடிகைகள் பலரும், பேபி நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாக மாறிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் குறிப்பாக 10 ஆண்டுகளுக்குள் பேபி ஸ்டார் ஆக இருந்து, இப்போது கதாநாயகியாக மாறிய நடிகை அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தான்.

அனிகா சுரேந்திரன்

ஏனெனில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அனிகா, அஜீத்குமாரின் மகளாக நடித்திருப்பார். அதனால் அவரை அடையாளமாக பலரும், அஜீத்குமாரின் ரீல் மகள் என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: “விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..” அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..

மலையாளம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே கதாநாயகியாக நடித்துவிட்ட அனிகா சுரேந்திரன் இப்போது, நடிகர் தனுஷ் டைரக்ட் செய்யும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கேரளா ஸாரியில்…

இந்நிலையில் விளம்பர படம் ஒன்றில் நடித்த அனிகாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் மலையாள பெண்கள் விசேஷ நாட்களில் அணியும் கேரளா ஸாரியில் மிக அட்டகாசமான அழகுடன் அனிகா சுரேந்திரன் வீடியோவில் இருக்கிறார். நயன்தாரா போல பளிச்சிடும் அழகில் இருக்கும் அனிகாவை பார்த்து ரசிகர்கள் பலரும் மிரண்டு போயுள்ளனர்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

துடைத்து வைத்த குத்துவிளக்கு

ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன் சின்னப் பெண்ணாக பார்த்த அனிகா, இந்த வீடியோவில் மப்பும், மந்தாரமுமாக பளிச் என துடைத்து வைத்த குத்துவிளக்கு போல பளபளக்கிறார். எப்படி இருந்த இந்த சின்னப் பொண்ணு, இப்போ இப்படி கிளாமரில் தூக்கலாக இருக்குதே என, ரசிகர்கள் பலரும் திகைத்துப் போய்விட்டனர்.

நயன்தாரா போல

கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கிறாரே, நடிகை அனிகா என்று ஆச்சரியப்பட்ட, அந்த வீடியோவை ஷேர் செய்கின்றனர். அதனால் அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

 

   

--Advertisement--