முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

பாண்டிச்சேரியை சேர்ந்தவர் மிர்ணாளினி ரவி. அதனால்தானே என்னவோ, இப்படி ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களை திகைப்படைய செய்திருக்கிறார். ஏனென்றால் பாண்டிச்சேரி என்றாலே சரக்குக்கு பஞ்சமில்லாத நகரம். ‘குடி’ மகன்களை குஷிப்படுத்துகிற ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

அங்கு சரக்கு ரகங்களின் விலை ரொம்ப ரொம்ப கம்மி என்பதால், தமிழகத்தின் எல்லை பகுதியில் இருக்கும் தமிழக ‘குடி’ மகன்கள் பலரும், சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பாண்டிச்சேரிக்கு சென்று, தேவையான சரக்குகளை வாங்கி வந்து வாரக்கணக்கில் வைத்து வைத்து அடித்து, குஷியாக இருப்பார்கள் என்ற தகவல் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மிர்ணாளினி ரவி

டிக்டாக் செயலியில் அதிகளவில் வீடியோக்களை வெளியிட்டு அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ணாளினி ரவி. அந்த பிரபலம் தந்த வெளிச்சத்தில் சினிமா நடிகையாக வாய்ப்பு பெற்றவர்.

முதலில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர், ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது செயலிகளில் டிக்டாக் மற்றும் டப்மாஸ் மூலம் அடிக்கடி தனது நடிப்பு திறனை, அழகை காட்டும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.

--Advertisement--

சூப்பர் டீலக்ஸ்

இந்த வீடியோக்களில் சிலவற்றை ஏதேச்சையாக பார்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு மிர்ணாளினி ரவியை அழைத்தார். அந்த படத்தில் நடித்த அவர், அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
அதன்பிறகு 2019ம் ஆண்டில் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, போகரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை பிரவீனாவா இது..? வைரலாகும் போட்டோஸ்.. குவியும் லைக்குகள்..

ரோமியோ

இப்போது விஜய் ஆண்டனி தயாரிப்பில், அவரே கதாநாயகனாக நடிக்கும் படம் ரோமியோ. இதற்கு முன்பு அவர் நடித்த ரத்தம், கொலை, பிச்சைக்காரன் 2 போன்ற படங்கள் சரியாக போகவில்லை. எனினும் இந்த படத்தை அவரே தயாரித்து நடிக்கிறார்.

இந்த படத்தில் மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு பரத் தனசேகர் இசையமைக்கிறார். இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் டைரக்ட் செய்கிறார். சம்மர் ஸ்பேஷலாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

முதலிரவு அறை

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் முதலிரவு அறையில் மாப்பிள்ளை கோலத்தில் விஜய் ஆண்டனி பெட்டில் அமர்ந்திருக்க, அருகில் மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருக்கும் மிர்ணாளினி ரவி, பிராந்தி பாட்டிலில் இருந்து சரக்கை டம்ளரில் ஊத்தி தருகிறார்.

இதையும் படியுங்கள்: குத்துவிளக்கு தமன்னா.. Zoom பண்ணி பாத்து ஏங்கி போன ரசிகர்கள்.. மெல்லிய உடையில் அது தெரிய போஸ்.

அதாவது திருமணமான நிலையில் இருவரும், முதலிரவு அறையில் பாலுக்கு பதில் தனது கணவருக்கு, இளம் மனைவி சரக்கு ஊற்றித் தருவது போல இந்த பர்ஸ்ட் லுக் காட்சி உள்ளது.

முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

முரட்டு குடி

கட்டிலிலும் கட்டிலை சுற்றிலும் பூக்கள் நிறைந்துள்ள முதலிரவு அறையில், முரட்டு குடி குடிக்க ஏதுவா, சரக்கு ஊற்றி தரும் இளம் மனைவியாக, போதை ஏற்றும் மிர்ணாளினி ரவியை பார்த்து ரசிகர்கள், இப்பவே போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு என்று பாடுகின்றனர்.