அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த நிக்கோலை சச்தேவ் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் திருமணத்துக்கு முன்பே அவர்கள் இருவரும் இப்போது தாய்லாந்து நாட்டில் ஸம்மர் ஹாலிடேஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்களது நெருக்கமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதே போல் சில தினங்களாக ரோபோ சங்கர் மகள் திருமணம் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அபர்ணா தாஸ்

அதைத் தொடர்ந்து தற்போது நடிகை அபர்ணா தாஸ் திருமணம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் பகத் பாசில் நடித்த ஞான் பிரகாசன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் அபர்ணா தாஸ்.

இந்த படத்தில் நடித்த பிறகு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்திலும், அதையடுத்து நடிகர் கவினுடன் டாடா படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையாக மாறினார்.

இதற்கிடையே தெலுங்கிலும் காலடி பதித்த அபர்ணா தாஸ், தெலுங்கில் அபர்ணாதாஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கோவையில் படித்தவர்

அபர்ணாதாஸ் பெற்றோர் ஓமன் நாட்டில் உள்ள நிலையில், கோவையில் கல்லூரி படிப்பை முடித்தவர் அபர்ணா தாஸ். அதன்பிறகு நிறைய டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு அதில் கிடைத்த புகழ் வெளிச்சத்தால்தான் அவருக்கு ஞான் பிரகாசம் என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!

இந்த படம் வெளியானது 2018ம் ஆண்டில். இந்த படம் காமெடி கலந்து படமாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து மனோகரம் என்ற படத்தில் நடித்து அபர்ணாதாஸ் மேலும் பிரபலமானார்.

பீஸ்ட், டாடா படங்களில்…

அதற்கு பிறகுதான் தமிழில் பீஸ்ட் படத்திலும், டாடா படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து அபர்ணா தாஸ்க்கு கிடைத்தது. இரண்டு படங்களிலுமே அவருக்கு முக்கியத்துவம் மிகுந்த கேரக்டர்கள் அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவரது திருமண அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தீபக் பரம்போல்

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்ற நடிகரை தான் அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறார். வரும் 24ம் தேதி இவர்களது திருமணம் வடக்கன்சேரியில் விமரிசையாக நடக்க உள்ளது.

அபர்ணா தாஸ்க்கு விரைவில் திருமணம். அதுவும் மாப்பிள்ளை யார் என்றால் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர் என்று தெரிந்ததால் பல ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.