வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!

வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!

திரையில் தெரியும் நடிகர் நடிகைகளை பார்த்து பெரிய பிம்பங்களாக நினைத்து ரசிக்கிறோம். சிரிக்கிறோம். ஆனால் அவர்களது குடும்ப பின்னணி, வாழ்க்கை முறை, உறவுகள் குறித்து யாரும் யோசித்து பார்ப்பதே இல்லை.

தன்னுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர், சினிமாவில் பெரிய நடிகராக கொண்டாடப்படும்போது உறவினராக உள்ள ஒருவர், அவரை டிவியில், சிவிமாவில் பார்த்தால் என்ன நினைப்பார், என்ன எண்ணங்கள் அவரது மனதில் ஓடும் என்பதை தான் இந்த பெண்மணியின் நேர்காணல் நமக்கு சொல்கிறது.

வடிவேலு அத்தை மகள்

ஆனால் நடிகர் வடிவேலுவின் அப்பாவுடன் பிறந்த சகோதரிகள் இருவர். அதில் ஒருவர் இறந்து விட்டார். இன்னொரு சகோதரியின் மகள்தான் அவர். மதுரை முட்டுச்சாலை பகுதியில் ரோட்டோரத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

பார்த்தவுடனே வறுமை நிறைந்த வாழ்க்கை என்பது முகத்தில், உடையில் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது.

முறைப்பொண்ணுதான்

அந்த நேர்காணலில் நடிகர் வடிவேலுவின் அத்தை மகள் கூறியதாவது,

என்னுடைய தாய்மாமா தான் வடிவேலு. அவரை நான் கட்டிக்க வேண்டிய முறைப்பொண்ணுதான். ஆனால் அவர் என்னை கட்டிக்கொள்ளவில்லை. அன்னியத்தில்தான் அவருக்கு பெண் எடுத்தார்கள். அவர் ஐந்து பெண்களுடன் பிறந்தவர் விசாலாட்சி. மிகவும் நல்ல குணம் படைத்தவர். தேவையான உதவிகளை செய்வார்.

நான் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன். அதனால் வடிவேல் மாமா குடும்பத்தினருக்கு என் மேல் கோபம். நான் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். என் மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி அவர்கள் தனியாக இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

வாடகை வீட்டில்

நானும் என் கணவரும் மட்டுமே வாடகை வீட்டில் 5000 ரூபாய் வாடகையில் இருக்கிறோம். நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கு வடிவேல் மாமா ஒத்திக்கு ஒரு வீடு வாங்கி தர வேண்டும். அவர்கள் பெயரை சொல்லி நானும், என் கணவரும் அந்த வீட்டில் வாழ்ந்து காலத்தை கழித்து விடுவோம்.

மதுரை வந்தால் வடிவேலுவை நான் பார்க்கச் செல்வேன். ஆனால் அவரை பார்க்க அங்கு இருப்பவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள். அதனால் எவ் கஷ்டத்தை அவரிடம் சொல்ல முடியவில்லை.

வீட்டு வேலைக்கு செல்கிறேன்

நான் காய்கறி வியாபாரம் செய்வதால், என் வீட்டு சமையலுக்கு காய்கறிகளை எடுத்துக்கொள்வேன். என் மகள் வந்தால் கொஞ்சம் காய்கறி கொடுத்து அனுப்புவேன். மற்றபடி இதன்மூலம் பெரிய வருமானம் இல்லை. வீட்டு வேலைக்கு நான் செல்கிறேன். ஒரு வீட்டில் பாத்திரம் துலக்க செல்கிறேன். அதற்கு ஒரு 1000 ரூபாய் சம்பளம் தருகின்றனர்.

அதுதவிர சாப்பாடு ஏதும் மிச்சமானால் தருவார்கள். அப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது.

இதையும் படியுங்கள்: மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

முறைதவறி பழகியது இல்லை

சின்ன வயதில், நான் முறைப்பெண், வடிவேலு தாய் மாமா என்றாலும் முறைதவறி பேசிக்கொள்ள மாட்டோம். பழக மாட்டோம். அவர் என்னை வாம்மா போம்மா என்றுதான் கூப்பிட்டு பேசுவார். மரியாதையாக நடந்துக்கொள்வார்.

என் அம்மாவை கடைசி காலத்தில் வடிவேலு மாமாதான் பார்த்துக் கவனித்துக்கொண்டார். என் அக்கா மகளுக்கு அவர்தான் திருமணம் செய்து வைத்தார். அவர் அண்ணன், தம்பிகளுக்கு, அக்கா, தங்கைக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்.

கடவுளாக வழிபடுவேன்

அதுபோல் எனக்கு ஒத்திக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்தால், காலம் முழுவதும் அவரை கடவுளாக வைத்து அவரை வழிபடுவேன் என்று கைகூப்பி கேட்டுக்கொண்டார் அவரது பிளாட்பாரத்தில் காய்கறி விற்கும் நடிகர் வடிவேலுவின் முறைப்பெண்.

வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனையாக கூறிய அந்த வார்த்தைகள், வடிவேலுவுக்கு கேட்டிருந்தால் நல்லது.