“பப்லூ.. ஷீலா ராஜ்குமார்…” – ஒரே நாளில் விவகாரத்து.. இது தான் ரகசியம்.. போட்டு உடைத்த நடிகர்..!

பிரபல நடிகர் பிரிதிவிராஜ் தன்னுடைய இரண்டாவது மனைவி சீத்தல் என்பவரை பிரிவதாக அறிவித்திருந்தார். நடிகை ஷீலா ராஜ்குமார் தன்னுடைய கணவர் தம்பி சோழன் என்பவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் பிரபல நடிகை ஷீலா ஆகிய இருவரும் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை ஒரே நாளில் வெளியிட்டிருந்தனர்.

இருவரும் ஒரே நாளில் விவாகரத்தை அறிவித்திருந்தது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகர் சமீபத்திய தன்னுடைய காணொளி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, இப்போது எல்லாம் நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா..? இல்ல அமெரிக்காவில் வாழ்கிறோமா..? என்ற சந்தேகம் வருகிறது.

ஏனென்றால் திடீரென கல்யாணம் செய்கிறார்கள்.. திடீரென விவாகரத்து வாங்கி சென்று விடுகிறார்கள். அந்த வகையில், நடிகர் பப்லு தன்னுடைய இரண்டாவது மனைவி சீத்தல் அவர்களை பிரிவதாக அறிவித்தார்.

பப்லுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி விவாகரத்து வாங்கி சென்று விட்டார்.

அதன் பிறகு தனியாக வசித்து வந்த பப்லு உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதும் வருவதுமாக இருந்தார். அப்போது அங்கே அவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவும்.. சினிமா நடிகர்.. கார்.. வீடு.. என சொகுசாக இருக்கிறார்.. என்ற காரணத்திற்காகவும் சீத்தல் இவர் மீது ஆசைப்பட்டு இருக்கிறார்.

ஆனாலும், அந்த பெண் உஷாராக இவரை திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இருவரும் பிரிந்து விட்டனர்.

மறுபக்கம் நடிகை ஷீலா தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு கவர்ச்சியோ ஆபாசமோ இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல பழகக்கூடிய நடிக்க கூடிய ஒரு நடிகை என்றால் அது ஷீலா என்று கூறலாம்.

பார்க்கும்போதெல்லாம்.. அண்ணா என்று தான் கூப்பிடுவார்.. கடைசியாக கூட எப்படிமா இருக்கிறாய்.. குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா.. கணவர் எப்படி இருக்கிறார்.. என்று கேட்டேன்.

ஆனால் திடீரென ஷீலா ராஜ்குமார் தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்துவிட்டார். இதற்கு என்ன காரணம்..? என்றால் அவருடைய கணவர் ஒரு உதவி இயக்குனர். சமீப காலமாக எந்த பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் போல் தெரிகிறது.

பொதுவாக உதவி இயக்குனர்கள் என்றாலே தொடர்ச்சியாக அவர்களுக்கு வருமானம் இருக்குமா..? என்றால் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு என ஒரு வாய்ப்பு அமையும் வரை அவர்கள் படாத பாடு பட்டாக வேண்டும்.

ஆனால், ஷீலா ராஜ்குமார் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கென ஒரு வருமானம் இருக்கிறது. இந்த இடத்தில் இருவருக்கும் ஈகோ சண்டையை வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால்.. என்ன பிரச்சனை என்று அவர்கள் கூறினால் தான் தெரியும்.

இப்படி ஒரே நாளில் பப்லுவும், ஷீலாவும் விவாகரத்தை அறிவித்திருக்கிறார்கள். இதைத்தான் அந்த காலத்திலேயே சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று.. திருமணம் செய்து கொண்ட பின் இரண்டு மாதங்களுக்கு நன்றாக சொகுசாகத்தான் இருக்கும்.. ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் வாழ்க்கை இயல்பு நிலையை எட்டிவிடும்.. வாழ்க்கையின் அடுத்த பக்கத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கும்.. அதற்கெல்லாம் நம்மை தயார் படுத்தி கொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைவது தான் இப்படியான குறுகிய கால விவாகரத்துகளை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …