Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அந்த மருந்து கொடுத்த டாக்டர்..! சில்க் ஸ்மிதாவை சீரழித்தவர் இவர் தான்.. பிரபலம் உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தவிர்க்க முடியாத நடிகர்களாக திகழும் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த சில்க் ஸ்மிதாவின் மரணம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவும் எதனால் இறந்தார் என்று தெரியாத புதிராகவும் உள்ளது.


இதனை அடுத்து இவரது வாழ்க்கை தொடர்பாக பல திரைப்படங்கள் மற்றும் அவரது புகைப்படங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இந்த சூழலில் நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

நடிகை சில்க் ஸ்மிதா..

விஜயலட்சுமி என்ற பெயரைக் கொண்ட சில்க் ஸ்மிதா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். வறுமையின் நிமித்தமாக தமிழ்நாட்டுக்கு பிழைப்பை தேடி வந்த இவரது குடும்பம் சில்க் ஸ்மிதாவால் திரை உலகை ஆண்டது பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சியை அதிக அளவு காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட இவரது கண்களை பார்த்தால் அப்படியே ரசிகர்கள் கட்டுண்டு போவார்கள். அந்த அளவு ஈர்ப்பு தன்மை இவரிடம் இருந்தது.


வினு சக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் அந்த படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் ஸ்மிதாவுக்கு முன்பு சிலுக் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது.

--Advertisement--

அந்த மருந்து கொடுத்த டாக்டர்..

படிப்பறிவு இல்லாவிட்டாலும் இந்திய மொழிகள் பலவற்றில் நடித்து மிகத் திறமையான நடிகையாக விளங்கிய சில்க் ஸ்மிதா ஒரு காலத்தில் படு பிஸியாக நடித்தவர்.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் மலையாள படத்தில் மோகன்லாலுடன் நடனமாட கேரளா செல்ல நேரம் இல்லாத காரணத்தால் மோகன்லால் சென்னை வந்து சிறப்புடன் நடனமாடி இருக்கிறார் என்றால் யோசித்துப் பாருங்கள் அவர் எவ்வளவு பிஸியாக இருந்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் நடித்து பீக்கில் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா திரையுலகில் பல முன்னணி நடிகர்களோடு நடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விபரீத முடிவுக்கு எடுத்துச் சென்றார்.


இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசும் போது முதல் முதலில் சிலுக்கை தான் தான் படம் எடுத்ததாகவும், அந்த படத்தை பார்த்து வினு சக்கரவத்தை இடம் அறிமுகப்படுத்தியதை அடுத்துத் தான் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என கூறினார்.

உண்மையை உடைத்த பிரபலம்..

மேலும் நன்றாக சம்பாதித்து வந்த காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று படங்களை சில்க் ஸ்மிதா தயாரித்து அந்த படங்கள் தந்த தோல்வியால் பெருத்த அடியை கொடுத்தது.

இதனால் போதை பழக்கத்திற்கு அடிமையான சில்க் ஸ்மிதாவிற்கு போதை மருந்து கொடுப்பதற்கு என்றே ஒரு மருத்துவர் இருந்தார்.


மேலும் அந்த மருத்துவரின் மகனும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அந்த நபரை தான் நடிக்கும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சூழ்நிலையில் அந்த டாக்டர் தனது மகனையும் சிலுக்கையும் சந்தேகப்பட ஆரம்பித்ததை அடுத்து சிலுக்கு மாபெரும் மன உளைச்சல் ஏற்பட்டது.

அதன் பிறகு தான் அவர் தவறான முடிவுக்கு சென்றார் என்ற விஷயத்தை சொன்னதை அடுத்து இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top