“உங்க நகம் உடைந்து போகிறதா? – அப்ப இப்படி பராமரித்து பாருங்க ..!

சிலர் தங்கள் நகங்களை முகத்தைப் போல அழகாக பராமரித்து அதற்கு நகச்சாயங்களை பூசி மிகவும் அழகாக வைத்திருப்பார்கள். அதைப் பார்க்கும் போதே நமக்கும் அவர்களைப் போல நகத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

எனினும் நம் நகம் வலுவில்லாமல் விரைவில் உடைந்து போவது மற்றும் சொத்தையாவது போன்ற குறைபாடுகளைக் கொண்டிருக்கும். எனவே உங்கள் நகங்களை சேதமடையாமல் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நகம் உடைந்து போகாமல் பாதுகாக்க உதவும் டிப்ஸ்

சருமத்துக்கு மட்டுமே மாய்ஸ்ரைசர் தேவை என்று நீங்கள் நினைக்காதீர்கள்.அது உங்கள் நகங்களுக்கும் தேவை. ஈரப்பதம் இருந்தால் மட்டும்தான் நகத்தில் எந்த விதமான தொற்றுகளும் தங்கி அதை சேதப்படுத்தாமல் இருக்கும்.

 எனவே நீங்கள் கட்டாயம் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை வாரத்துக்கு ஒரு முறை உங்கள் நகக்கண்களிலும் நகங்களிலும் தேய்த்து வாருங்கள்.

உங்கள் நகம் பாதுகாப்பாக இருக்க நிறமற்ற பேஸ் நெய் பாலிஷை உங்கள் நகங்களின்  போடலாம். இதன் மூலம் தூசி, அழுக்கு போன்றவற்றில் இருந்து உங்கள் நகத்தை பாதுகாக்க முடியும்.

--Advertisement--

நீங்கள் நகங்களை வெட்டும்போது ஒட்ட வெட்டாமல் சிறிதளவு நகத்தை விட்டு விட்டு வெட்டுங்கள். இதன் மூலம் உங்கள் கை நகங்களில் இருக்கும் க்யூட்டிகளை பாதுகாக்க முடியும். மேலும் கடைகளில் விற்கும் கியூட்டிகல் கிரீம்களை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.

மருதாணியை வைப்பதன் மூலம் இயற்கையாகவே உங்கள் நகம் நிறம் மாறுவதோடு பாதுகாப்பாக இருக்கும். அதிகளவு தண்ணீரில் உங்கள் நகங்களை நனைக்க வேண்டாம். மெனிக்யூர் முறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கை நகங்களை மேலும் பாதுகாக்கலாம்.

உங்கள் நகங்களில் ஏற்படுகின்ற மாற்றத்தை வைத்தே உங்கள் உடலில் ஏற்படும் நோயை கணிக்க முடியும். எனவே உங்கள் நகத்தை பராமரிப்பதில் அக்கறை செலுத்துவது மிகவும் நல்லது. நகம் சொத்தையாகாமல் இருக்க மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் மருதாணி போடுவதை பழக்கிக் கொள்ளுங்கள்.