தக்காளி.. வசூல் மழையில் ஆவேசம்.. OTTயில் மட்டும் இத்தனை கோடியா..

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை எந்த மொழி நடிகராக இருந்தாலும் அவரிடம் திறமையும், நல்ல நடிப்பாற்றலும் சிறப்பான கேரக்டர் பிரதிபலிப்பும் இருந்தால் அவரை வெற்றி பெறச் செய்வதில் அவர்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்காது.

பிறமொழி நடிகர்கள்

அப்படித்தான் பல நடிகர்கள் பிறமொழிகளிலிருந்து வந்து தமிழில் மிகப் பெரிய நடிகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளை சேர்ந்த நடிகர்கள், வில்லனாக நடிக்கிறார்கள், அல்லது நாயகன்களாக நடிக்கிறார்கள். பெயர், புகழ் வாங்குகிறார்கள்.

சமீப காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், மலையாள படங்கள் பெரிய வரவேற்பு பெறுகின்றன. மோகன் லால், மம்முட்டி, சுரேஷ் கோபி போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடித்து, நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்கள்.

அதேபோல் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த சிரஞ்சீவி, வெங்கடேஷ், விஜய தேவர கொண்டார ரெட்டி, அல்லு அர்ஜூனா, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் போன்ற நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

அதேபோல் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமார் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அடுத்து தமிழ்ப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

---- Advertisement ----

இந்தி நடித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், ஜாக்கி செராப், ஷாருக்கான் போன்றவர்களும் தமிழ் சினிமாவில் பரிச்சயமான முகங்களாக, நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர்களாக இருக்கின்றனர்.

பகத் பாசில்

ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சமீப காலமாக, சிறந்த அங்கீகாரத்தைப் பெற்ற மலையாள நடிகர் ஒருவர், அது பகத் பாசில்தான். பகத் பாசில் ஒரு பிறவி நடிகன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர்.

குறிப்பாக மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்திருந்தனர். அந்த படத்தில் மிகவும் டீசண்ட் ஆன ஒரு தொழிலதிபர் மகனாக இருந்து கொண்டு, அவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

ரத்தின வேலு கேரக்டரில்

தொடர்ந்து விக்ரம் படத்தில் பகத் பாசில் டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக வந்து ஒரு மாஸ் நடிப்பை தந்திருந்தார். அதற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில், ரத்தினவேலு என்ற அந்த கேரக்டரில் ஒரு சமுதாய தலைவனாக, ஒரு ஜாதியின் அங்கீகாரம் பெற்ற அடையாளமாக அவரது நடிப்பு பெரிய அளவில் ரீச் ஆனது. இப்போது பகத் பாசில் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து வேட்டையன் படத்தில், ரஜினிகாந்த் மகனாக அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவேசம்

இந்நிலையில் பகத் பாசில் நடித்த ஆவேசம் என்ற மலையாள படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மஞ்சும்மெல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு, ஆடுஜீவிதம் போன்ற மலையாள வெற்றிப் படங்களின் வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்ற படமாக இருந்தது.

இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான ஆவேசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இந்த படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில் ஓடிடியில் ஆவேசம் வெளியாகிறது. ஆவேசம் படம் ஓடிடியில் ரிலீஸாவது ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமையும். இந்த படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் 35 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் மழையில் தொடர்ந்து குவிக்கும் ஆவேசம் படம், OTTயில் மட்டும் ரூ.35 கோடிக்கு விற்பனையா என்று ரசிகர்கள் வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

---- Advertisement ----