Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இயக்குனர் சேரன் யாரிடம் வாங்கிய கடனை திருப்பி கட்ட பிக்பாஸ் வந்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே சமூக பொறுப்புள்ள இயக்குனர்களாக, நல்ல படங்களை ரசிகர்களுக்கு தருகின்றனர். அவர்கள் தங்கள் புகழ், செல்வாக்கு இதை மட்டும் முக்கிய நோக்கமாக கொள்ளாமல், தன்னுடைய படங்கள், நல்ல படைப்புகளாக இருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில், எடுக்கின்றனர்.

அந்த படைப்புகளை சிறந்த கதை அம்சங்களுடன், நல்ல கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கி, ரசிகர்களுக்கு திரைப்படங்களாக்கி தருகின்றனர்.

இயக்குனர் சேரன்

அந்த வகையில் சிறந்த படங்களை தமிழ் சினிமாவில் தந்து மூன்று முறை சிறந்த படம், சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருது பெற்றவர் டைரக்டர் சேரன்.

இவர் 2000ம் ஆண்டில் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு என்ற படத்திற்கும், அதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு வெளிவந்த ஆட்டோகிராப் படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த தவமாய் தவமிருந்து படத்துக்கும் என மூன்று படங்களுக்கும் தேசிய விருது பெற்றவர் டைரக்டர் சேரன்.

இயக்குனர் சேரன், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர். இவரது அப்பா பாண்டியன், சினிமா தியேட்டர் ஆபரேட்டர். சேரனின் அம்மா துவக்கப்பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. சேரனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

--Advertisement--

சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தவர் சேரன். அவர் தயாரிப்பு மேலாளராக புரியாத புதிர் என்ற படத்தில் பணி புரிந்தார். கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் இது.

சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை

அதைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை பல படங்களில் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சேரன், கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்திலும் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

பாரதி கண்ணம்மா

தொடர்ந்து பாரதி கண்ணம்மா என்ற படத்தை சேரன் இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. சில சர்ச்சைகளையும் கடந்து படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி, பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, ஆட்டோ கிராப் போன்ற பல படங்களை எடுத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமானவர் டைரக்டர் சேரன்.

நடிகர் சேரன்

சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், மாயக்கண்ணாடி, ஜே கே எனும் நண்பனின் கதை, இராமன் தேடிய சீதை, பிரிவோம் சந்திப்போம், யுத்தம் செய், உள்ளிட்ட பல படங்களில் சேரன் நடிக்கவும் செய்தார்.

நடிகராகவும் இயக்குனராகவும் சேரன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதே நேரத்தில் இயக்குனர் சேரன் ஒரு கட்டத்தில் தோல்வி படங்களையும் தந்தார். இதன் மூலம் அவர் மிகப்பெரிய கடன் நெருக்கடிக்கு ஆளானார். கடன்களில் சிக்கித் தவித்த அவர் ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் கலந்து கொண்டார்.

கடன்களில் சிக்கினார்

சினிமாவில் படங்களை சொந்தமாக தயாரித்த வகையில் தனக்கு ஏற்பட்ட கடன்களை அடைக்கும் ஒரே நோக்கத்திற்காக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் வேறு வழியின்றி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நல்ல இயக்குனராக, இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் டைரக்டர் சேரன், சமீபத்தில் அவர் இயக்கிய வெப் சீரிஸ் சேரனின் ஜர்னி. இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

இயக்குனர் சேரன் சினிமா படங்களை சொந்தமாக தயாரித்த வகையில் சிலரிடம் வாங்கிய கடனை திருப்பி கட்டதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார் என்பதை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சியடைந்தனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top