Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பிக்பாஸில் குடும்ப குத்துவிளக்காக தாமரைச்செல்வியா இது..? மாடர்ன் உடையில் ஆளே மாறிட்டாரே..!

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு விதவிதமாய் பிக் பிரதர், பிக் பாஸ் என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் அந்தந்த நட்சத்திர நடிகர்களை வைத்து இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரும்பாலான போட்டியாளர்கள் யார் என்ற அடையாளமே தெரியாமல் இருந்திருந்தால் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள்.

அந்த வகையில் மக்களுக்கு யாரென்றே தெரியாமல் புதுக்கோட்டையை சேர்ந்த தெருக்கூத்து கலைஞராகவும் நாடகக் கலைஞராகவும் பல திருவிழாக்களிலும், தெருகளிலும் நடனமாடி கூத்து ஆடி வந்தவர்தான் தாமரைச்செல்வி.

---- Advertisement ----

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை வெகுவாக கவர்ந்திழுத்தார்.

பிக்பாஸ் தாமரைச்செல்வி;

கடைசிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த தாமரை செல்வியின் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பாக கிராமத்து தோற்றத்தில் எதார்த்தமான பேச்சும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தாமரைக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து கொண்டே இருந்தது.

தொடர்ச்சியாக வாய்ப்புகளை விட்டு விடாமல் அதனை பயன்படுத்திக்கொண்டால் தாமரை. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியும் கூட தாமரை தொடர்ச்சியாக கலந்து கொண்டு அதிலும் கணிசமான வருமானத்தை சம்பாதித்தார்.

அந்த நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார் தாமரை.. மேலும் இவர் சின்ன துறையில் நடிக்க ஆரம்பித்து பாரதிகண்ணம்மா சீரியல் சின்ன ஒரு ரோலில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனத்தையும் கவர்ந்து விட்டார்.

சீரியல்களில் தாமரைச்செல்வி:

தற்போது சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்து அசத்தி வருகிறார். இந்த ரோல் அவருக்கு மிக கச்சிதமாகவும் இல்லத்தரசிகளின் மனம் கவரும் கேரக்டராகவும் இருந்து வருகிறது.

குறிப்பாக அந்த சீரியலில் வீடியோக்கள் YouTube தளங்களில் ஷார்ட்ஸாக வெளியிட மிகப்பெரிய அளவில் தாமரை பிரபலமாகிவிட்டார்.

தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும்போது தன்னுடைய கணவர் தன்னை பிரிந்து விட்டதாகவும், தன்னுடைய மகனையும் அவர் அழைத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் கூறி மிகுந்த வருத்தத்தோடு கலங்கியிருந்தார்.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தொடர்ச்சியாக பிரபலமானதால் பிறகு கணவருடன் சேர்ந்து வாழ தொடங்கி விட்டார்.

குடும்பம், குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தாமரை கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டியும் குடி புகுந்தார்.

மாடர்ன் உடையில் நயந்தாராவை மிஞ்சும் தாமரை:

இதை எடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தாமரைச்செல்வி தனது கணவர் பார்த்தசாரதியுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பி சென்றிருக்கிறார்.

அப்போது அவர்கள் விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டனர்.

முதன்முறையாக மாடர்ன் உடையில் தாமரை செல்வியை பார்க்கும் நெட்டிசன்ஸ் அட நம்ம தாமரையா இது?|என வாய்பிளந்து விட்டனர்.

அது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவனையே ஓவர் டேக் செய்து விடுவதாக பலர் கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

அத்துடன் தாமரை இந்த புகைப்படத்தை பதிவிட்டு “One Life One world Explore it” என கேப்ஷன் கொடுத்து லைக் அள்ளியுள்ளார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top