Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வெக்கமே இல்லையா..? நடிக்காதிங்க..! கேப்டன் சமாதி முன் சீன் போடாதிங்க..! விளாசும் பிரபலம்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவின் துக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது குறித்து குறிப்பிட்ட நடிகர்கள் மீது கடுப்பில் இருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில், அந்த நடிகர்களில் சிலர் சமீபத்தில் பிரபல அரசியல் தலைவரை ஒருவரின் நூறாவது ஆண்டு விழாவில் வரிசை கட்டி வந்து கலந்து கொண்டது ரசிகர்களை இன்னுமே கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பல்வேறு நடிகர்கள் தங்களுடைய புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் அவர்களின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்தியது.

ஆனால் கேப்டனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த மனமில்லாமல் ட்விட்டரில் ட்ரீட் செய்து விட்டு, அதிகபட்சமாக ஒரு வீடியோவை வெளியிட்டு விட்டு இப்போ ஒதுக்கி கொண்டார்கள் சில முன்னணி நடிகர்கள். இதில், நடிகர் சங்கத்தின் தலைவரும் அடக்கம்.

--Advertisement--

இந்நிலையில், ஒரு வாரம் கழித்து தற்பொழுது கேப்டன் அவர்களின் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையங்கள் வைப்பதும்.. அழுவதுமாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதெல்லாம் சுத்தமான நடிப்பு என்று குறிப்பிட நடிகர்களை விளாசி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு சமீபத்தில் தன்னுடைய வீடியோ ஒன்றில் இது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் கூறியதன் சாராம்சமாவது, கேப்டன் இறுதி ஊர்வலத்தில் பல நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தற்பொழுது அவருடைய நினைவிடத்தில் வந்து அழுது மலர் வளையம் வைக்கிறார்கள்.

கேட்டால், வரமுடியாத சூழ்நிலை என்று கூறுகிறார்கள். நான் தெரியாமல் கேட்கிறேன் உங்களுடைய வீட்டில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் இப்படித்தான் வர முடியாத சூழ்நிலை என்று வீடியோ வெளியிட்டு விட்டு அமைதியாக இருப்பீர்களா..? இதனை பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய மக்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா..?

கேப்டன் விஜயகாந்த் என்ற ஒருவர் இல்லையென்றால் இன்று பல முன்னணி நடிகர்கள் அட்ரஸ் தெரியாமல் போயிருப்பார்கள்.. எவ்வளவு பிரச்சனைகளை சுமூகமாக முடித்து வைத்து பலரை பொருளாதார சிக்கலில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

அவ்வளவு ஏன்.. இன்று நடிகர் சங்கம் என்ற ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு காரணமே கேப்டன் தான்.. நிஜமாக கேப்டனின் ஆன்மா உங்களை மன்னிக்காது.. என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் செய்யார் பாலு. இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top