48 வயது தான்.. Daniel Balaji மரணத்திற்கு உண்மையான காரணம்.. தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

Daniel Balaji : நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபலமானவர் நடிகர் பாலாஜி வயது 48 ஆகிறது.

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் தனுஷின் பொல்லாதவன் நடிகர் சூர்யாவின் காக்க காக்க நடிகர் விஜயின் பைரவா, பிகில் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை உதவிக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் டேனியல் பாலாஜி. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறும் 48 வயதே ஆன டேனியல் பாலாஜி மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியிருக்கின்றது. இந்நிலையில், இவர் மரணம் அடைந்ததற்கான உண்மையான காரணம் என்ன..? என்று இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி நடிகர் டேனியல் பாலாஜி கடந்த சில மாதங்களாகவே நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்திருகின்றது. ஒரு கட்டத்தில் அது தீவிரமடையவே மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு வரும்பொழுது அது எதனால் ஏற்படுகிறது என்பதை முறையான பரிசோதனை செய்து அதனை சரி செய்து கொள்வது நலம் பயக்கும்.

இதனை இன்றைய பரபரப்பான உலகில் பலரும் செய்ய தவறிவிடுகின்றனர். சாதாரணமாக வலியாகத்தான் இருக்கும் என தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

இதனால் பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றது. இந்த இழப்புகளை தடுப்பதற்கு உடல் மொழியை கேட்க வேண்டும். ஏதேனும், வலி அல்லது அசவுகரியம் ஏற்படுகின்றது. அது தொடர்ந்து இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் நீடிக்கிறது எனும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவர் அணுகி எதனால் இந்த வலி/அசவுகரியம் ஏற்படுகிறது என்பதை கேட்டறிந்து அதற்கான முறையான பரிசோதனைகளை செய்து தங்களுடைய உடல் நலத்தை சரி செய்து கொள்வது அவசியம்.

தன்னுடைய உடல் நலத்தில் போதுமான கவனம் செலுத்தாது தான் டேனியல் பாலாஜியின் மறைவுக்கு உண்மையான காரணம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.