முரளி குடும்பத்திற்கு இருக்கும் வினோத நோய்.. டேனியல் பாலாஜி திடீர் மறைவின் பின்ணணி கூறிய மருத்துவர்..!

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக நடித்து நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் டானியல் பாலாஜி.

மற்ற வில்லன் நடிகர்களை விட டேனியல் பாலாஜியின் வில்லத்தனமான நடிப்பில் கொஞ்சம் யதார்த்தம் அதிகமாகவே தென்படும்.

எப்போதும் வழக்கம் போல மற்ற நடிகர்கள் நடிப்பது போல் இல்லாமல் இவரது நடிப்பும் இவரது தோற்றமும் பெரிய கண் விழிகளை காட்டி பார்வையாலே மிரட்டும் ஸ்டைலும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

48 வயதான இவர் முதன்முதலில் கடந்த 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் பாடத்தில் போலீஸ் அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: விஷயம் தெரியாதவன் பாத்தா.. கப்புன்னு பேண்ட்டை கழட்டி குடுத்துடுவான்.. பொதுவெளியில் கஜோல் கன்றாவி..!

--Advertisement--

அதன் பிறகு இவர் காக்க காக்க திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

குறிப்பாக அந்த வில்லன் ரோல் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக முக்கியத்துவம் வாழ்ந்ததாக அந்த படத்திற்கு டேனியல் பாலாஜியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகர் டேனியல் பாலாஜி:

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் அவருக்கு வில்லன் வேடங்களாக தேடி வந்தது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் மீண்டும் பேமஸ் ஆனார்.

அமுதன் என்ற கேரக்டரில் நடித்து நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் அந்த படத்தை தொடர்ந்து 2007 இல் வெளிவந்த தனுஷின் பொல்லாதவன் திரைப்படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அப்படத்தின் ஹீரோ தனுஷின் நடிப்பிற்கு ஈடாக டேனியல் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

பொதுவாக டேனியல் பாலாஜி எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என எந்த ஒரு இயக்குனரிடமுமோ , தயாரிப்பாளரிடமோ பெரிதாக போய் நின்றதில்லை என சினிமா விட்டாராம் கூறுகிறது.

தனது நடிப்பு திறமையை பார்த்து கிடைத்த வாய்ப்புகளில் அவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை இந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

அவ்வளவு ஏன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருந்து வந்த நடிகர் முரளியின் தம்பி தான் இந்த டேனியல் பாலாஜி.

யாரிடமும் பட வாய்ப்பு கேட்டதில்லை:

ஆனாலும் கூட தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தனது அண்ணனிடம் என்ன எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு சூழலிலும் போய் நின்றதே கிடையாதாம்.

அவ்வளவு ஏன் அவரை சந்திப்பதை கூட நிறுத்திக் கொண்டாராம். காரணம் அவரை சந்திக்க சென்றாலே வாய்ப்புக்காக தான் போகிறேன் என மற்றவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக நடிகர் முரளியை சந்திப்பதே டேனியல் பாலாஜி நிறுத்திக் கொண்டாராம்.

இந்த அளவுக்கு தனது சொந்த முயற்சியால் மட்டுமே உயர்ந்து மேலே வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்து வந்த டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார்.

இவரது இந்த திடீர் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ந்து போய்விட்டார்கள். தொடர்ந்து கமல்ஹாசன், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் இவரது இரங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தனது 48 வயதில் எதிர்பாராத மரணத்தை தழுவிய டானியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்திருந்த நிலையில் நல்லடக்கத்திற்கு முன்பாக டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக கொடுக்கப்பட்டது.

இதன் மூலம் அவர் மரணித்த பிறகும் இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பார் என பலரும் அவரது நல்லெண்ணத்தை பாராட்டினார்கள்.

முரளி குடும்பத்திற்கு இருக்கும் வினோத நோய்:

இந்நிலையில் நடிகர் டானியல் பாலாஜியின் திடீர் மரணம் குறித்தும் அவரது குடும்பத்தில் உள்ள விநோத நோய் பற்றியும் பிரபல மருத்துவரான காந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் டேனியல் பாலாஜியின் திடீர் மறைவின் பின்னணி குறித்து சில தொடுக்கிடும் விஷயங்களை கூறி அதிரவைத்துள்ளார்.

டேனியல் பாலாஜி போலவே அவருடைய அண்ணன் முரளியும் இளம் வயதில் இறந்தவர் இவருடைய குடும்பத்திற்கே ஒரு வினோத நோய் இருக்கிறது.

அதுதான் மன அழுத்தம். மன அழுத்தம் என்பது மூளையில் ஏற்படக்கூடிய யோசனைகள் தேவையற்ற சிந்தனைகள் காரணமாக தான் தோன்றுகிறது.

ஆனால் அது பாதிப்பது நேரடியாக இதயத்தை. என்னதான் நாம் மூளையை கொண்டு யோசித்தாலும் கவலைப்பட்டாலும் அது நேரடியாக இதயத்தின் இயக்கத்தை பாதிப்படைய செய்கிறது.

இன்றைய சூழ்நிலையில் பலரும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தகுந்த சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டு நலம் பெற வேண்டும்.

தவிர அந்த கவலைகளை மறக்க தவறான வழிகளை தேர்வு செய்யக்கூடாது என கூறியிருக்கிறார் மருத்துவர் காந்தராஜ்.