Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

49 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாத டேனியல் பாலாஜி..! காரணம் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

Tamil Cinema News

49 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாத டேனியல் பாலாஜி..! காரணம் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

நடிப்பில் அசகாய சூரர்களாக ரசிகர்களை கவர சில நடிகர்களாக மட்டுமே எளிதாக முடியும். அதுவும் ஹீரோவாக நடிப்பவர்களை மிக சுலபமாக ரசிகர்களுக்கு பிடித்துப் போகும். ஏனெனில் நல்லவர்களை எல்லோருமே விரும்புவது இயல்புதான்.

ஆனால் வில்லனாக நடிப்பவர்களுக்கு ரிஸ்க் அதிகம். ரசிகர்களுக்கு அவர்களை திரையில் பார்த்தாலே எரிச்சலும் கோபமும்தான் வரும். ஆனால் அப்படிப்பட்ட வில்லன் நடிப்பிலும், ரசிகர்களின் மனதை கவர ஒரு சில நடிகர்களால் மட்டுமே முடியும்.

அந்த வரிசையில் நம்பியார், அசோகன், பிஎஸ் வீரப்பா, ரகுவரன், நாசர், விஜயகுமார், பொன்னம்பலம், விநாயகம் போன்றவர்கள் வில்லனாக நடித்தும், ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்கள்.

டேனியல் பாலாஜி

இந்த வரிசையில் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு நடிகர்தான் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் கேரக்டரில் அவரது அந்த கொடூரமான வில்லன் நடிப்புதான், படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது. கவுதம் மேனன் அந்த படத்தில் மிகச் சிறப்பாக டேனியல் பாலாஜியை கையாண்டு இருந்தார்.

--Advertisement--

அதே போல் பொல்லாதவன் படத்திலும், தன் அண்ணனையே ஒரு கட்டத்தில் கொடூரமாக கொலை செய்யும் தம்பி கேரக்டரில் நடித்திருப்பார் டேனியல் பாலாஜி. இந்த படத்திலும் இயக்குனர் வெற்றிமாறன் அவரை சரியாக பயன்படுத்தி இருப்பார்.

தொடர்ந்து பைரவா, பிகில், வட சென்னை என பல படங்களில் நடித்த டேனியல் பாலாஜி தமிழ், தெலுங்கு, கன்னடம் என 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆனால் இவரது நடிப்பு பயணம் முதலில் துவங்கியது சீரியலில்தான்.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. பிகில் பட நடிகையா இது..? குட்டியூண்டு நீச்சல் உடையில் மோசமான போஸ்..!

சித்தி தொடரில்…

நடிகை ராதிகாவின் சித்தி தொடரில், டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால்தான் அவர் டேனியல் பாலாஜி ஆனார். இல்லாவிட்டால் அவர் வெறும் பாலாஜியாக தான் இருந்திருப்பார்.

முன்னணி நடிகர் முரளியின் தம்பி இவர் என்பதே, அவரது மறைவுக்கு பின்தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது. ஏனெனில் தன் அண்ணனையே அடிக்க சந்திக்க மறுத்தவர் இவர். முரளியை அடிக்கடி சந்தித்தால் நடிக்க வாய்ப்போ, சிபாரிசோ கேட்டு வந்திருக்கிறார் என தவறாக மற்றவர்கள் நினைப்பார்களோ என்றே முரளியுடன் நெருக்கமான உறவை தவிர்த்தவர் டேனியல் பாலாஜி.

 

கோவில் கட்டியவர்

ஒரு படவிழாவில் டேனியல் பாலாஜி குறித்து பேசிய நடிகர் விஜய் பேசுகையில், படத்தில் மத்தவங்களை சாவடி அடிக்கிற டேனியல் பாலாஜியில், ஆவடியில் கோவில் கட்டி வருகிறார். படத்தில்தான் கையில் கத்தி வைத்திருப்பார். நிஜத்தில் அவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்று பாராட்டி பேசியிருந்தாா்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்த நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. ஆனால் அவரை பற்றிய மற்றொரு உண்மை அவரது மறைவுக்கு பின் வெளிவந்துள்ளது.

இதையும் படியுங்கள்: 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி சிவரஞ்சனியின் கணவர் இந்த நடிகரா..? பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படம்..!

49 வயதாகியும்…

அதாவது 49 வயதாகியும் அவருக்கு திருமணமாகவில்லை. மனைவி, பிள்ளைகள் என குடும்ப வாழ்க்கை அவர் வாழவே இல்லை. அவரது அம்மா, அவருக்காக நிறைய இடங்களில் பெண் பார்த்து இருக்கிறார்.

ஆனால் ஏதேனும் சில காரணங்களால் சரியான வரன் அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது. பலமுறை முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை.

அதன்பிறகு திருமணம் குறித்த ஆர்வமே போய் விட்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் அவரே கூறியும் இருக்கிறார்.

இதையடுத்து ஒரு காலகட்டத்தில் தனக்கு திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் நடிகர் டேனியல் பாலாஜி.

சரியான வரன் அமையல

49 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாத டேனியல் பாலாஜி.. அதற்கு காரணம் பல இடங்களில் பெண் பார்த்தும் சரியான வரன் அமையாததுதான். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து இனி திருமணமே வேண்டாம் என்றுதான் முரட்டு சிங்கிளாக, ஆன்மிகத்தில் அதிக நாட்டத்துடன் டேனியல் பாலாஜி வாழ்ந்திருக்கிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top