அண்ணா.. அண்ணான்னு.. கூப்ட்டுக்கிட்டு சுத்தினியே.. கேலிக்கூத்தான அண்ணன்-தங்கை உறவு.. தர்ஷன் பதிலை பாருங்க..

அண்ணா.. அண்ணான்னு.. கூப்ட்டுக்கிட்டு சுத்தினியே.. கேலிக்கூத்தான அண்ணன்-தங்கை உறவு.. தர்ஷன் பதிலை பாருங்க..

துவக்கத்தில் இருந்தே விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியத்துவம் தரப்பட்டது.

அதிலும் பெண் போட்டியாளர்கள் தேர்வாகி, பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

லாஸ்லியா

அந்த வகையில் லாஸ்லியா, தர்ஷன், ஜனனி போன்றவர்கள் இலங்கையில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர்கள்தான்.

இதில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ( 2019ம் ஆண்டு) பங்கேற்றார். கும்மென்று இருந்த லாஸ்லியாவை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்துப் போய் விட்டது.

கவின்

வீட்டுக்குள் இருந்த கவின், அவரை சின்சியராக காதலித்தார். வீட்டுக்குள் இருந்த மற்றொரு போட்டியாளரான இயக்குநர் சேரன், லாஸ்லியாவை தன் மகளாக ஏற்றுக் கொண்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், மீண்டும் இலங்கைக்கு செல்லாமல் சென்னையில் முகாமிட்ட லாஸ்லியா, பிக்பாஸ் செலிபரட்டி தந்த வெளிச்சத்தில் சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:  இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..

கூகுள் குட்டப்பா

சில விளம்பர படங்களில் நடித்தும், ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் லாஸ்லியாவுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த படங்களில் நடித்தும் பெரிய அளவில் அவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட் ஆகவில்லை.

பிக்பாஸ் லாஸ்லியாவா…

இதற்கிடையே கொழுக் மொழுக் அழகுடன் இந்த லாஸ்லியா, உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போனார். அட, பிக்பாஸ் லாஸ்லியாவா இது என பலரும் வியப்படையும் அளவுக்கு அவரது அடையாளம் மாறிப் போயிருந்தது.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா இருவரும் ஜோடி சேர்ந்து நெருக்கமாக நடித்திருந்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் அண்ணன், தங்கை என பேசிவிட்டு சினிமாவில் இப்படி கூத்தடிக்கிறார்களே என ரசிகர்கள் பலரும் முகம் சுளித்தனர்.

இதையும் படியுங்கள்:  கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

திரும்ப திரும்ப பேசிக்கொண்டு…

இதுகுறித்து பதிலளித்த நடிகர் தர்ஷன், இந்த கருத்துக்கு திரும்பவும் பதில் கொடுத்தால் அதுபற்றியே திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருப்பார்கள்.

அதை அப்படியே விட்டுவிட்டு போய்விட வேண்டியதுதான். அது எங்களை பாதிக்காது. அதுமட்டுமின்றி ஏதாவது இருந்தால் அதுபற்றி யோசிக்கலாம்.

ஒரு மாதிரி பார்த்த உங்களுக்கு அதில் இருந்து வெளியே வருவது கஷ்டம். அதை எல்லாம் நியாயப்படுத்த முடியாது, என்று லாஸ்லியா உடன் நடித்ததற்கு விளக்கம் தந்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அண்ணன் – தங்கை உறவு

அண்ணா.. அண்ணான்னு.. கூப்பிட்டுக்கிட்டு சுத்தினியே.. கேலிக்கூத்தான அண்ணன்-தங்கை உறவையும், தர்ஷன் திமிரான பதிலையும் பாருங்க என ரசிகர்கள் கடுப்பாகி கமெண்டுகளை பதிவு செய்கின்றனர்.