கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இணையாக மரியாதையும் முக்கியத்துவம் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் வில்லன் நடிகர்கள் அல்ல. காமெடி நடிகர்கள்தான்.

நடிகர்கள் நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு வரை காமெடி நடிகர்களுக்கான முக்கியத்துவம் சினிமாவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

கவுண்டமணி

கவுண்டமணி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கண்ணதாசன், கருணாநிதி எழுதிய நாடகங்களில் வீதிகளில் நடத்தப்படும் போது, அதில் சின்ன சின்ன ரோல்களில் நடிப்பது கவுண்டமணியின் ஆரம்ப கால வாழ்க்கையாக இருந்திருக்கிறது.

கவுண்டமணி குடும்பம், விவசாயத்தை பின்னணியாக கொண்டது. கவுண்டமணியின் நிஜப்பெயர் சுப்ரமணியம். ஆனால் சினிமாவுக்காக அவர் பெயர் கவுண்டர் மணி என்பது கவுண்டமணியாக மாறிவிட்டது.

--Advertisement--

16 வயதினிலே

அதற்கு இன்னொரு காரணம், கவுண்டர் மணி என்பதை, 16 வயதினிலே படத்தில் டைட்டில் கார்டுக்கு எழுதும்போது பாக்யராஜ் கவுண்டமணி என எழுதியதால் அதுவே கவுண்டமணி பெயராக நிலைத்து விட்டது.

ஆனால் 16 வயதினிலே படத்தில் கவுண்டமணி நடிக்க, படத்தின் இயக்குநர் பாரதிராஜா சம்மதிக்கவில்லை. உதவி இயக்குனராக பாக்யராஜ் தொல்லை நச்சரிப்பு தாங்க முடியாமல், ஓகே சொல்லி இருக்கிறார்.

ஆனால் பாக்யராஜ் பெயரை காப்பாற்றும் விதமாக அடுத்த சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக கவுண்டமணி பெயர் எடுத்தார்.

முன்னணி நடிகர்களுடன்..

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், சரத்குமார் என பல முன்னணி நாயகர்களுடன் நடித்த கவுண்டமணி அடுத்து விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஹீரோவுடன் இருக்கும் நண்பராக நடித்த கவுண்டமணி அடித்த கிண்டல்களால் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கவுண்டமணி செந்தில் காமெடி ஜோடிக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு, வேறு எந்த காமெடி ஜோடிக்கும் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்:  காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

சத்யராஜ் – கவுண்டமணி ஜோடி

இதில் சத்யராஜ் – கவுண்டமணி ஜோடி சேர்ந்துவிட்டால் அவர்களது காமெடி வேற லெவலில் இருக்கும். இருவருமே கோயம்புத்தூர் என்பதால் அவர்களது குசும்பு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்.

நடிகர்களில் தினசரி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் கவுண்டமணிதான். ஏனெனில் ஒரே நாளில் 2, 3 படங்களில் நடிக்கும் அளவுக்கு அவர் கடந்த 1980, 90களில் பிஸியாக இருந்ததால், இப்படி தினசரி சம்பளம் பெற்றார்.

நடிகர்களை போலவே, காமெடி நடிகர்களில் ஹீரோயின் இருந்தது கவுண்டமணிக்கு மட்டும்தான். ஏறக்குறைய கதாநாயகனுக்கு உரிய தகுதியில் படத்தில் நடித்தார் கவுண்டமணி என்றால் அது மிகையல்ல.

ஒத்த ஓட்டு முத்தையா

இப்போது யோகிபாபுவுடன் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கவுண்டமணி நடித்திருக்கிறார். பல கேரக்டர்களில் கவுண்டமணி நடித்திருந்தாலும், அவரது ஆசைகளில் ஒன்று அதுதான்.

இதையும் படியுங்கள்:  அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

வில்லன் வேடத்தில்…

அதாவது பல நாடகங்களில் வில்லன் கேரக்டரில் கவுண்டமணி நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் அசத்தலான ஒரு வில்லன் வேடத்தில் நடிக்க கவுண்டமணி ஆசைப்பட்டு இருக்கிறார்.

ஆனால் கடைசி வரை நிறைவேறாமல் போனது கவுண்டமணியின் அந்த ஆசை..கவுண்டமணியா அது என பலரும் அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த மாதிரி ஒரு படத்துல வில்லனாக நடிக்கணும் என்கிற அவரது ஆசை நிறைவேறவில்லை.