“என் அப்பாவின் இந்த செயல் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது..” முதன் முறையாக ரகசியம் உடைத்த ஸ்ருதிஹாசன்..!

நடிப்பில் என்சைக்ளோபீடியாவாக திகழும் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்திருந்தார். தமிழில் முதல் படமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் அஜித், விஷால், விஜய், தனுஷ் போன்றவர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது தந்தையைப் போலவே இவருக்கும் பன்முக திறமை உள்ளது.

தற்போது தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் இவருக்கு சாந்தனு என்ற காதலன் இருக்கிறார். இந்த காதலனோடு மும்பையில் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது காதலனை கட்டி அணைப்பது, லிப் லாக்கில் கிஸ் அடிப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்து விடுவார்.

இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரது அப்பா ஸ்டாராக இருப்பதால் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறாரா? என்ற கேள்வியை கேட்டதற்கு அதெல்லாம் இல்லைங்க. உங்களுக்கு என்ன தெரியும். என் பெற்றோரின் பிரிவு என்னையும், என் தங்கை அக்ஷராவையும் கடுமையாக பாதித்தது என்று கூறினார்.

--Advertisement--

மேலும் தனக்காவது சற்று வயது அதிகமாக இருந்தது. ஆனால் என் தங்கை அக்ஷரா சிறியவளாக இருந்ததின் காரணமாக அவர்களின் பிரிவு அவளை மிகவும் பாதித்தது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

என் அப்பா பெரிய ஸ்டார் தான் என்றாலும் நான் அவரிடம் எந்த விதமான பணத் தேவைகளை இதுவரை பேசியதோ, கேட்டதோ கிடையாது. 21 வயதில் நான் அப்பா வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். இப்போது என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.

என்னுடைய பொருளாதாரத் தேவைகளை நானே தான் பூர்த்தி செய்து கொள்கிறேன். வேண்டுமென்றால் நிதி உதவி செய்ய அப்பா இருக்கிறார் என்ற ஒரு தைரியம் இருக்கலாம். ஆனாலும் நான் அவரை இது வரை சார்ந்தது இருந்தது இல்லை.

எனவே எப்போதும் நான் அப்பாவிடம் பண உதவி எல்லாம் கேட்க மாட்டேன் என்று படு தைரியமாக ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சினிமாவில் சாதித்து வரும் கமலஹாசன் தன் மகள்களின் தேவைகளை அறிந்து தந்தையாக தனது கடமையை செய்ய தவறிவிட்டாரா? என்ற கோணத்தில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

எது எப்படியோ? பெண் பிள்ளைகளுக்கு உரிய நேரத்தில் திருமணத்தைக் கூட செய்து முடிக்காத தந்தையாக கமலஹாசன் விளங்குகிறார் என்ற ஆதங்கத்தை பலரும் கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

எனவே இனியாவது கமலஹாசன் இதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து வழக்கமான தந்தையைப் போல் இருப்பாளா? இல்லை இப்படித்தான் இருப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் தந்தையை விட்டு பிரிந்து சென்ற மனைவியின் பிரிவு, தந்தையை பாதிப்பதை விட பெற்ற பிள்ளைகளை அதிகளவு பாதித்துள்ளது என்பது ஸ்ருதியின் பதிவில் இருந்து அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

மேலும் இனியாவது குழந்தைகளுக்காக தங்களது கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்து வாழ்வது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நன்மையை தரும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.