இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே எப்போதுமே ரசிகர்களால் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் ரசிகர்களை கவரும் விதமாக தனது படைப்புகளை தந்து அவர்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடுகின்றனர்.

குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் சில ஆண்டுகள் வருவதில் இடைவெளி ஏற்படலாம். ஆனாலும் அவரது முந்தைய படங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே நினைவில் இருந்து, அவர் புதிய படம் வருகிறது என்றவுடன் திரையரங்கை நோக்கி வரத்துண்டுகின்றன. அந்த அளவிற்கு அவர்களது படைப்புகள் ரசிகர்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்று விடுகின்றன.

இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கமர்சியல் கிங் என்று இவருக்கு ஒரு தனியாக பட்ட பெயரும் உள்ளது. கமர்சியல் கிங் என்று ரசிகர்கள் கொண்டாடுவது ஒரு சில இயக்குனர்களைத்தான். அதில் இயக்குனர் ஹரியும் ஒருவர்.

பிரசாந்த் – சிம்ரன் நடித்த தமிழ்

கடந்த 2002 ஆம் ஆண்டில் நடிகர் பிரசாந்த் – சிம்ரன் நடித்த தமிழ் என்னும் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி அறிமுகமானவர். அதன் பின் சியான் விக்ரம் நடித்த சாமி, அருள், சரத்குமார் நடித்த ஐயா, இந்த படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக, நயன்தாராவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஹரி என்பது கவனிக்கத்தக்கது.

--Advertisement--

அடுத்த சூர்யா நடிப்பில் ஆறு, வேல், சிங்கம் படங்களை இயக்கினார். இதில் சிங்கம் 2,3 என தொடர்ந்து வெளியானது. இதில் முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

அடுத்து விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் ஹரி.

ரத்னம்

இந்நிலையில், இப்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் படம், கடந்த 26 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது. விஷால் நாயகனாகவும், இரட்டை வேடத்தில் பிரியா பவானி சங்கரும் நடித்திருந்தனர். சமுத்திரக்கனி கௌதம மேனன் உள்ளிட்ட பலர் நடித்த ரத்னம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், படம் பெரிய அளவில் பிளாப் ஆனது, 8 கோடி ரூபாய் கூட வசூலைக் கூட படம் தாண்டவில்லை இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீத்தா விஜயகுமாருடன் திருமணம்

இயக்குனர் ஹரியின் மனைவி ப்ரீத்தா. இவர் விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர தம்பதி இரண்டாவது மகள். பிரீத்தா விஜயகுமாரை, 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் ஹரி திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விஜயகுமாரின் மருமகன் தான் இயக்குனர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஹரி – பிரீத்தா தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இயக்குனர் ஹரி தனது மனைவி மற்றும் தனது மூன்று மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம், இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

3 இளம் ஹீரோக்கள் ரெடி

இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அசந்து போய், விஜயகுமார் குடும்பத்தில் இருந்து 3 இளம் ஹீரோக்கள் ரெடியாயிட்டு வர்றாங்கப்பா என்று ஆச்சரியமாக கூறி வருகின்றனர்.