நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் யாரு தெரியுமா..? பலரும் அறியாத உண்மைகள்..!

தமிழ் திரை உலகில் ரசிகர்களால் விரும்பப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும், திரைப்பட பாடல் ஆசிரியராகவும் விளங்குகிறார்.

இதையும் படிங்க: சஞ்சீவ் அக்கா நடிகை சிந்து.. எப்படி இறந்தார் தெரியுமா..?


பன்முகத் திறமையை கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவராக மாறியதோடு மட்டுமல்லாமல் சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் உடன் இணைந்து அதிக அளவு பணிகளை செய்து இருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்..

இப்படி நம் முன் இயக்குனராக உயர்ந்து நிற்கும் விக்னேஷ் சிவனின் இளமைக்காலம் எப்படி இருந்தது. அந்த காலத்தில் அவர் என்னென்ன செய்து கொண்டு இருந்தார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த விக்னேஷ் சிவன். இவரது சொந்த ஊர் லால்குடி ஆகும். இவரோடு உடன் பிறந்த சகோதரி ஐஸ்வர்யா இருக்கிறார். இவரின் தாய் மற்றும் தந்தை காவல்துறை அதிகாரியாக விளங்கியவர்கள்.

--Advertisement--

காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய தந்தை தன்னுடன் தற்போது இல்லை. எனினும் தனது தாயை சீரும் சிறப்புமாக பார்த்து வருகிறார். இவரது தாயார் அண்மையில் தான் ஓய்வு பெற்றார். வடபழனியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தான் இவர் இவரது பெயர் மீனா குமாரி.


மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் விக்னேஷ் சிவன் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதே பள்ளியில் தான் சிலம்பரசனும் படித்திருக்கிறார். அதனால் சிம்புவும், இவரும் பள்ளி காலம் முதற்கொண்டு நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாது.

நயனின் கணவர் பற்றி சில உண்மைகள்..

இதனை அடுத்து தனது வாழ்க்கையை துவங்க ஆரம்ப காலத்திலேயே விக்னேஷ் சிவன் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த குறும்படத்தை தனது நண்பர் சிலம்பரசரிடம் காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்த தான் இந்த குறும்படம் திரைப்படமாக போடா போடி என்ற பெயரில் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு வெளி வந்தது. இந்த படத்தில் சிலம்பரசன் நடித்ததை அடுத்து படம் மாபெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது.


2007 ஆண்டு வெளி வந்த இவரின் முதல் படமான சிபியில் இவர் நண்பரோடு இணைந்து நடித்திருப்பார். மேலும் 2012 இல் போடா போடி திரைப்படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

அத்துடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் விக்னேஷ் என்ற பெயரில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று விட்டார். இதனை அடுத்து தான் நானும் ரௌடி தான் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் தான் இவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்தது.

இப்ப தெரிஞ்சுதா விக்கி யாருன்னு..

திரைக்கதையை முழுமையாக எழுதி பாடல் ஆசிரியராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. எனினும் நானும் ரௌடி தான் என்ற படத்தின் மூலம் நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த இவரது பன்முக திறமை மக்கள் மத்தியில் பரவியது.


இந்நிலையில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் அஜித்குமாரின் படத்தை இயக்கி இருந்த நிலையில் அது கை நழுவி போக தற்போது வேறு ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இவருக்கு வெற்றி பெற வேண்டும் என்று இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

இளம் வயதில் விக்னேஷ் சிவன் பற்றி இவ்வளவு கதைகள் உள்ளதா? என்று அவரைப் பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.