“மல்லிகை செடியை தாக்கும் பூச்சிகள்..! – இப்படி விரட்டினால் ஓடிவிடும்..!

மல்லிகைப்பூ செடியில் ஒரு பூ பூத்து விட்டாலே நமது வீடே மணக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட அந்த செடியில் திடீர் என பூச்சிகள் தாக்கம் அதிகரிக்கும். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவோம்.

 பொதுவாக இந்த மல்லிகைப்பூ செடியில் பூப்பேன், மொட்டுப்புழு,  செஞ்சிலந்தி, வேர் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட்டு மல்லி செடியை வாட வைத்து விடும்.

jasmine diseases

இதன் காரணத்தினால் பூக்க வேண்டிய பருவத்தில் பூக்கள் அதிகம் கிடைக்காமல் செடி பட்டுப்போக வாய்ப்புள்ளது.எனவே இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மல்லிகைப்பூ செடியில் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பதற்கான முறைகள்

மல்லிகை பூச்செடியில் மொட்டு ஈ, மொட்டு புழு, பூ பேன்கள் ஏற்பட்டால் மொட்டுக்கள் செடிகள் தங்காமல் அப்படியே உதிர்ந்து விடும். இதனை சரி செய்ய நீங்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் அக்ரோ சர்வீஸ் கடைகளில் கிடைக்கும் மானோகேரோட்டோபாஸ் மருந்தினை சேர்த்து இதனோடு திரவ நிலையில் இருக்கும் சோப்பையும் கலந்து தெளிப்பதின் மூலம் பூ பேன்கள், மொட்டு புழு  போன்றவற்றின் பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

jasmine diseases

செஞ் சிலந்தி தாக்குதலின் மூலம் முதலில் முதிர்ந்த இலைகளில் தாக்குதல் ஏற்பட்டு, பின் துளித்து வரும் இலைகளிலும் இந்த பாதிப்பு ஏற்படும். பொதுவாக இந்த பாதிப்பு மஞ்சள் நிறத்தில் இலைகளில் தோன்றும் இதனை அடுத்து நுனித்தண்டு பூக்கள் போன்றவை பாதிக்கப்பட்டு பூக்களின் உற்பத்தி குறையும்.

--Advertisement--

jasmine diseases

மேலும் செடியை உற்று நோக்கும் போது அதில் சிவப்பு நிற பூச்சிகள் மெதுவாக நகர்வதை நீங்கள் காணலாம். இதனை சரி செய்ய டை கோபால் மருந்தினை இரண்டு மில்லி மீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து மல்லிகை பூச்செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகை பூ செடிகள் இந்த பூச்சிகளின் அபாயத்திலிருந்து நீங்கள் பாதுகாத்து விடலாம். அது மட்டும் அல்லாமல் அதிகளவு பூக்களையும் பெறலாம்.