“பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!

“பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். இப்போது முதலில் கடலளவு, இப்போது உலகளவாக மாறிவிட்டது மொபைல் போன் உலகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரே படத்தில் ஒரே காட்சியில் நடித்து, ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமடைவது போல இன்றைய காலகட்டதில் முகநூலில், இன்ஸ்டாகிராமில், டிவிட்டர் (எக்ஸ்) பதிவில் ஒரு சில வீடியோக்களை வெளியிடும் சிலர், விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர்.

யூடியூப்பர்

அதுவும் நாளுக்கு நாள் யூடியூப்பர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் அரிய தகவல்களை, நல்ல கருத்துகளை, மருத்துவ விஷயங்களை, ஆன்மீக உணர்வுகளை, சமையல் கலையை, நடன திறமையை இப்படி பலதரப்பட்ட விஷயங்களை பேசும் யூடியூப்பர்களும் இருக்கின்றனர்.

அதே வேளையில், இந்த ஓட்டலில் சாப்பிடுங்கள், இந்த ஊரில் இந்த கடைகள் உள்ளது, இந்த ஊரில் இந்த வசதிகள் உள்ளது போன்ற விவரங்களை, தகவல்களை தரும் யூடியூப்பர்களும் இருக்கின்றனர்.

--Advertisement--

இதுமட்டுமின்றி ஓட்டல், ஓட்டலாக சென்று அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளை வீடியோவாக வெளியிட்டு அதன்மூலம் பிரபலமாகும் யூடியூப்பர்களும் இருக்கின்றனர்.

சாப்பிட்டு சாப்பிட்டு

இன்னும் ஒரு சிலர் டாடி ஆறுமுகம், சாப்பாட்டு ராமன் போன்றவர்கள் தட்டு நிறைய கறியும், மீனும், பிரியாணியும் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு அதை வைரலாக்கியும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்.

எல்லோரும் உழைத்து சம்பாதித்து சாப்பிடுவார்கள். சில டயூடியூப்பர்கள் சாப்பிடுவதையே தொழிலாக மாற்றிக்கொண்டு அதன்மூலம பல லட்சங்களை மாதந்தோறும் வருமானமாக பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..

நாறப் பயலே, செத்தப்பயலே என பேசும் ஜிபி முத்து, அந்த பிரபலத்தின் மூலம் விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இப்போது திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரே நாளில் டேமேஜ்

இப்படி யூடியூப்பர்களின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஒரு யூடியூப்பர் பதிவிட்டே வீடியோ அவரை ஒரே நாளில் டேமேஜ் ஆக்கியிருக்கிறது.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒட்டலில் சாப்பிட்ட உணவு குறித்த ரெவ்யூ பதிவிட்ட அந்த யூடியூப்பர் அதை வீடியோவாக பதிவிட்டார். ஆனால் அவர் அந்த வீடியோவில் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் செல்வது போன்ற காட்சியும் இடம்பெற்றது. இந்த வீடியோ வைரலானது.

இதையும் படியுங்கள்:  அனாதையா பையனோட நடு ரோட்ல நின்னேன்.. ஏன் இதை பண்ணனும் நெனச்சேன்.. தீபா கண்ணீர்..!

ஹெல்மெட் அணியாமல்…

இதையடுத்து அந்த வீடியோவை பார்த்த ஒருவர், இப்படி ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமீறல் செய்து வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார் என யூடியூப்பர் தவறை சுட்டிக்காட்டி, அந்த வீடியோவையும் பகிர்ந்து இருந்தார்.

ரூ. 1000 அபராதம்

அதைப் பார்த்த சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார், அந்த பிரபல பெண் யூடியூபருக்கு, போக்குரவத்து விதிமீறல் காரணத்துக்காக ரூ. 1000 அபராதம் விதித்தது. இது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் மக்களின் செல்வாக்கை பெற்ற யூடியூப்பர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை போலீஸ்

பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்காக, போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம விதித்தது, ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டது.