Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்… அந்த மூன்று நாட்கள்.. கேப்ரில்லா உடைத்த ரகசியம்..!

நடிகை கேப்ரில்லா தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்ப காலத்தில் அறிமுகமானார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6-ல் வெற்றியாளராக மாறினார்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2012 -ஆம் ஆண்டு 3 என்ற படத்தில் சுமி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை கேப்ரில்லா..

3 என்ற தமிழ் திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்த இவர் சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்திருந்தார்.

இதனை அடுத்து சமுத்திரக்கனியின் படமான அப்பா படத்தில் ரக்ஷிதா பானு என்ற வேடத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

---- Advertisement ----

தற்போது கேப்ரில்லா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பகுதியில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

 

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கேப்ரில்லா அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த மூன்று நாட்கள்..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கேப்ரில்லா தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி பலரையும் ஷாக்கில் தள்ளிவிட்டார்.

 

இதில் அவர் பேசும் போது பத்தாம் வகுப்பு படிக்கக் கூடிய சமயத்தில் என்னிடம் மொபைல் போன் இல்லை. மேலும் நான் படிப்பில் அதிகம் கவனத்தை செலுத்தி வந்த சமயத்தில் என்னுடைய புகைப்படத்தை மாப்பிங் செய்து விட்டார்கள்.

எனினும் அந்தப் புகைப்படத்தை இருந்தது நான் இல்லை. ஒரு வேளை நானாக இருக்குமோ? என்று தோன்றும் அளவுக்கு புகைப்படத்தை என்னை போல மாற்றி வெளியிட்டது எனக்கு மிகவும் கசப்பான அனுபவத்தை தந்தது.

இந்த சம்பவம் ஆனது என் மனதை மிகவும் பாதித்ததோடு மட்டுமல்லாமல் நான் தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் அது பற்றிய கவலையிலேயே இருந்தேன்.

இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்..

இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் இருந்த அனைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த சமயங்களில் மனம் வேதனை பட்டது. இதனை வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது என்று கேப்ரில்லா சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் இது போன்ற பல விஷயங்கள் இணையங்களில் பரவி வருவதும் அதற்கு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வகையில் deep fake முறையின் மூலம் பிரபல நடிகையின் புகைப்படங்கள் தாறுமாறாக இணையத்தில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அது போலவே அன்று கேப்ரில்லாவுக்கு நிகழ்ந்ததை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இது போன்ற அவலத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை யோசித்து விரைவில் வைப்பது நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை தற்போது நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top