உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க கடலை மசாலா..! – வாங்க செய்யலாம்..!

உடல் எடையை குறைக்க : இன்று காலத்தில் சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் எடை அதிகரித்து வருகிறது. எடை குறைப்புக்கு உதவும் கடலை மசாலாவின் எண்ணெய் பயன்படுத்தாமல் தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கொண்டைக்கடலை  2 கப்
  2. காய்ந்த மிளகாய் 3
  3. பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
  4. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. வெந்தய பொடி 1 ஸ்பூன்
  7. சீரகம்2 ஸ்பூன்
  8. ஏலக்காய் 5
  9. மிளகு 10
  10. வெங்காயம் 1
  11. பே இலை 1
  12. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  13. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  14. மாங்காய் பொடி 1ஸ்பூன்

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட கொண்டைக்கடலை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து 6 – 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.இதனிடையே எடுத்துக் கொண்ட வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தற்போது கடலை மசாலா தயார் செய்ய கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாய், மல்லி பொடி, பெருஞ்சீரகம், சீரகம், ஏலக்காய், மிளகு சேர்த்து வறுத்து. பின் மிக்ஸி ஒன்றில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

பின்பு குக்கர் அடுப்பில் வைத்து அதை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .அடிப்பிடிக்கும் நிலையில் சிறிதளவு தண்ணீர் ஊற வைத்த கொண்டைக்கடலை ,இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

தொடர்ந்து மிக்ஸியில் அரைத்து வைத்த மசாலா மிளகாய் தூள் ,மாங்காய் பொடி ,கொத்தமல்லி தழைகளை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வர வேக வைத்து இறக்கிவிட சுவையான கடலை மசாலா தயார்.

--Advertisement--

சுவையான இந்த கடலை மசாலாவினை ரொட்டி வெள்ளை சாதத்துடன் சேர்த்து சுட சுட பரிமாறவும்.இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும் அது மட்டும் இன்றி உடல் எடையை குறைககும்.