“உங்க வீட்டு மல்லிகை பூ செடி..!” – அதிகமாக பூக்க இத செய்யுங்க..!

எத்தனை பூக்களை தலைக்கு வைத்தாலும், மல்லிகை பூ வைப்பது போல மணம் இருக்காது. அப்படிப்பட்ட மல்லிகை பூ செடி உங்கள் வீட்டில் இருந்தால் அந்தப் பூச்செடியில் அதிகமான பூக்களை நீங்கள் பெற சில குறிப்புகள் உள்ளது. அந்த குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டு மல்லிகை பூ அதிகளவு பூக்கும்.

jasmine

இப்படி அதிக அளவு மல்லிகைப் பூவை பூக்க வைக்கும் டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம்.

மல்லிகை பூக்கள் அதிகமாக பூக்க உதவும் குறிப்புகள்

பொதுவாக மல்லிகை பூச்செடிக்கு செம்மண் ஏற்றது என்று கூறலாம். செம்மண் இல்லை என்றாலும் இருக்கின்ற மண்ணில் நீங்கள் வேப்பம் புண்ணாக்கு, தொழு உரம் என்று சொல்லக்கூடிய மக்கிப்போன மாட்டுச்சாணம் போன்றவற்றை நன்கு கலந்து உங்கள் செடிக்கு போடுவதின் மூலம் உங்கள் மல்லிகை செடி செழிப்பாக வளரும்.

மேலும் மல்லிகை செடி நன்கு வளர வெயில் அவசியம் தேவை. எனவே வெயில் இருக்கும் பகுதியில் நீங்கள் வளர்ப்பதின் மூலம் அதிக அளவு பூக்களை பெற முடியும்.

jasmine

மல்லிகைச் செடி இருக்கும் மண் பகுதியை சற்று கொத்திவிட்டு அதில் ஆட்டுச் சாணம் அல்லது மாட்டு சாணம் போன்றவற்றை போடுங்கள். ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நீங்கள் உங்கள் செடிக்கு தேவையான அடி உரத்தை இவ்வாறு கொடுப்பதன் மூலம் உரிய காலத்தில் பூக்கும் பூக்கள் அதிக அளவு பூக்கும்.

--Advertisement--

மேலும் உங்கள் மல்லிகை செடி அதிக அளவு போக்க நீங்கள் பின்னாக்கு கரைசல், காய்கறி கழிவுகள், பஞ்சகவ்ய உரம், முட்டை ஓடு, வாழைப்பழ தோல் போன்ற இயற்கை  கழிவுகளை உரங்களை உங்கள் மல்லி பூ செடிக்கு கொடுப்பதன் மூலம் இது அதிக பூக்களைத் தரும்.

jasmine

வெயில் காலங்களில் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளிலும் உங்கள் மல்லி பூச்செடிக்கு நீரை ஊற்ற வேண்டும்.மேலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கவாத்து எடுத்து விடுவதின் மூலம் பூக்கள் அதிகரித்து கிடைக்கும்.

எனவே இந்த முறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகை பூச்செடியிலிருந்து அபரிமிதமான மல்லிகை பூவை பெறலாம்.