இஸ்லாம் மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதம் திரும்ப காரணம் இது தான்..! இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரே போடு…!

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளரான ஜிப்ரான் 2011ல் சினிமாவில் இசை அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜிப்ரான் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “வாகை சூடவா” திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்:

முதல் படம் வரவேற்பை பெற்று ஜிப்ரானின் கெரியரில் மிக முக்கிய படமாக அது அமைந்துவிட்டது.

குறிப்பாக இத்திரைப்படத்தில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து இன்றளவு மக்களின் மனதில் நீங்காத பாடலாக இருந்து வருகிறது.

---- Advertisement ----

சரசர சாரக்காத்து வீசும் போதும்.. என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.

இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பேர் விருது ஜிப்ரானுக்கு கிடைத்திருந்தது.

முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜிப்ரானுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இதனிடையே தெலுங்கு திரைப்படத்திலும் இசை அமைத்து வந்தார். இதுவரை கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான் .

ஜிப்ரானின் வெற்றிப்படங்கள்:

தமிழில் வெளிவந்த வத்திக்குச்சி ,குட்டி புலி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, அமர காவியம் ,உத்தம வில்லன், பாபநாசம் ,தூங்காவனம் ,மகளிர் மட்டும் ,அறம், தீரன் அதிகாரம் ஒன்று சென்னை டு சிங்கப்பூர், விஸ்வரூபம் 2 ,ஆண் தேவதை ,ராட்சசன், கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இப்போது கடைசியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் குரங்கு படல் திரைப்படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைத்திருக்கிறார்.

இந்து மதத்திற்கு மாறிய ஜிப்ரான்:

இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை தொடர்ச்சியாக பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை குறித்து இசையமைப்பாளரான சிப்ரான் சமீபத்தில் youtube சேனல்களுக்கு பேட்டி அளித்த வருகிறார்.

அப்போது பேட்டி ஒன்றில் குரங்கு திரைப்படத்தைப் பற்றியும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

குரங்கு பெடல் படம் பற்றி அவர் கூறியதாவது, இந்த படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைந்துவிட்டது.

அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் எப்போதும் இல்லாதது ஒரு விஷயத்தை நான் செய்திருக்கிறேன்.

அதாவது என்னுடைய அப்பா பெயரையும் என்னோட பெயருடன் இணைத்து வைத்திருக்கிறேன்.

என்னுடைய அப்பா பெயர் ‘கணேஷ் பாலாஜி வைபோதா” எனவே இந்த படத்தில் நான் “ஜிப்ரான் வைபோதா” என வைத்திருக்கிறேன் என கூறினார்.

பெயரை மாற்றிக்கொண்ட ஜிப்ரான்:

இதற்கான காரணம் நான் சில ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மதத்தை பின்பற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசி மூன்று நான்கு வருடங்களாக நான் இந்துவாக மாறிவிட்டேன் .

சட்டபூர்வமாக அதற்கான எல்லாம் மாற்றங்களையும் செய்துவிட்டு தற்போது முறையான இந்துவாக நான் வாழ்ந்து வருகிறேன்.

இதுவரை என்னுடைய படங்களில் ஜிப்ரான் என்ற பெயரை தான் பயன்படுத்தி வந்தேன் தற்போது இந்துவாக மாறியதற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படத்தில் ஜிப்ரான் வைபோதா என என்னுடைய பெயரை மாற்றி வைத்திருக்கிறேன் என கூறி இருக்கிறார்.

முன்னதாக இந்து மதத்தில் பிறந்து வளர்ந்தவரான ஜிப்ரான் அதன் பிறகு இடையில் வந்து இஸ்லாமிய மதத்தை பின்பற்ற துவங்கினார் தற்பொழுது மீண்டும் இந்துவாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கு பெடல்:

காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலசந்தர் நடிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் “குரங்கு பெடல்”படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----