Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பகவத் கீதை எனும் பொக்கிஷம்..!” – நிறைவான வாழ்விற்கு இத கடைப்பிடித்தாலே போதும்..!!

 தசாவதாரங்களில் கிருஷ்ணா அவதாரம் முக்கியமான அவதாரமாக கருதப்படுகிறது. இந்த கிருஷ்ணா அவதாரத்தின் சமயத்தில் தான் பகவான் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கு  உபதேசம் செய்ததை பகவத் கீதை என்று சொல்லப்படுகிறது.

 இந்த பகத் கீதையில் கிருஷ்ணர் கூறிச் சென்ற ஒவ்வொன்றும் பொன்மொழிகள் என்று கூறலாம். அதனை வாழ்வில் நாம் கடைப்பிடிப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் பெறுவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தம் இல்லாமல் மன நிறைவான வாழ்க்கையை இந்த பூலோகத்தில் வாழலாம்.

மனிதனுக்கு நம்பிக்கையை தரும் பகவத் கீதை வரிகள்

  1. உங்கள் வாழ்வானது உங்கள் எண்ணப்படியே அமையும்.எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்.
  1. நீ எதிர்பார்த்தும் பாசம் ஓரிடத்தில் கிடைக்கவில்லை என்றால் வலி அதிகமாகத்தான் ஏற்படும். எனினும் நீ உன்னை பக்குவப்படுத்திக் கொண்டால் அதுவே உனக்கு நிரந்தரம் என்பதை புரிந்து கொள்.

  1. உனக்கு இல்லாததை பற்றிய கவலை தேவையே இல்லை.கிடைத்திருப்பதை வைத்து பொறுமையாக இருந்தால் உன் வாழ்வு சுபிட்சமாக இருக்கும்.
  1. எதையும் யாரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். அது ஏமாற்றத்தையே தரும். கடமையை செய்யுங்கள் பலனை பற்றி கவலை கொள்ளாதீர்கள்.
  1. காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் நீங்கள் கொண்ட லட்சியத்தில் இருந்து மாறாமல் இருப்பது மிகவும் நல்லது.

  1. சில நேரங்களில் நீங்கள் சரியான இடத்தை தீர்மானிக்க தவறிவிடுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் தவறான இழப்பை நோக்கி செல்கிறீர்கள். எனவே ஒவ்வொரு முறையும் செயலை சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

       7. எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக தான் நடக்கிறது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கிறது. சையது நடந்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  1. நல்லதை முதலில் நரகமாக தோன்றினாலும் முடிவில் அதுதான் சொர்க்கம். தீயவை முதலில் சொர்க்கமாக தோன்றினாலும் முடிவில் அதுதான் நரகம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

மேற்கூறிய  இந்த வழிமுறைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வந்தால் கண்ணன் கூறியபடி உங்கள் வாழ்வு செழிப்பாக மாறும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top