மனைவி கர்ப்பம்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. யூட்யூபர் இர்ஃபான் கொடுத்த விளக்கத்தை பாருங்க..!

நம்மில் பெரும்பாலானவர்கள், சாப்பிடுவதற்காக தினமும் உழைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறோம். காலை முதல் இரவு வரை ஓயாமல் பணி செய்கிறோம். ஒரு சிலர், இரவு பணியில் மாலை முதல் மறுநாள் காலை வரை பணி செய்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர், இப்போது சாப்பிடுவதை வைத்தே பணம் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்கியிருக்கின்றன. இவர்கள் வேலை என்னவென்றால், ஊர் ஊராக செல்வது, அங்குள்ள பிரபல ஹோட்டல்களுக்கு சென்று, அங்குள்ள ஸ்பெஷல் உணவுகளை வயிறு முட்ட ரசித்து ருசித்து சாப்பிடுவது, சாப்பிடும் போதே அதை வீடியோ எடுத்து மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வதுதான் அவர்களது வேலை.

இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கின்றனர் என்பது தான் அவங்களது சாதனை.

சாப்பிடுவதே வருமானம்

அவர்களை பொறுத்தவரை அவர்கள் சாப்பிட சம்பாதிப்பது இல்லை. சாப்பிடுவதுதான் அவர்களது வருமானமே.

இதில் பல வகைகளில் காணப்படுகின்றனர். ஒரு சிலர் குழுவாக குறிப்பிட்ட ஊர்களுக்குச் சென்று ஒரு காட்டுக்கு அமர்ந்து முழு ஆட்டை, நாட்டுக் கோழிகளை, மீன் ரகங்களை, அங்கு கிடைக்கும் பிரபல உணவு பொருட்களை வைத்து, சமைத்து உண்பார்கள். சிலர், 50 கிலோ, 100 கிலோ என அதிகளவில் அசைவ வகைகளை சமைத்து, அங்குள்ள மக்களுக்கு பரிமாறுவர்கள். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொண்டு சென்று பரிமாறுவர்கள்.

--Advertisement--

ஓரிருவர் சாப்பாட்டு ராமன்களாக மாறி, ஒருவரே 100 இட்லி சாப்பிடுவது, 5 கிலோ மட்டன் சாப்பிடுவது, 4 கிரில் முழு கோழிகளை சாப்பிடுவது என்றும் சாப்பிட்டு, அதை வீடியோக்களாக்கி ஏகப்பட்ட வருமானம் பார்க்கின்றனர்.

இர்ஃபான்

அந்த வகையில் யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தவர் இர்ஃபான். இவர் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு உணவுகளையும் ஒரு பிடி பிடித்து, விடுவார்.

குறிப்பிட்ட ஊர்களுக்குச் சென்று அங்குள்ள ஸ்பெஷல் அயிட்டங்களை சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுகள் குறித்து விமர்சனம் செய்வார். அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு.

சாப்பிடும் ஆசையை தூண்டும்

அதிலும் சாப்பிடும்போது, இவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் அட்டகாசமாக இருக்கும். சாப்பிட ஆசை இல்லாதவர்களை கூட இவர் சாப்பிடும் போது பார்த்தால், நாமும் சாப்பிடலமா என்று அந்த உணவை சாப்பிடும் ஆசையை தூண்டிவிடும் .

அதே நேரத்தில் இர்ஃபான் யூ டியூப் சேனல் முழுக்க முழுக்க உணவுகளுக்கே பிரத்யேகமானதாக இருக்கிறது.

தன்னுடைய கடின உழைப்பால், தினமும் ஒரு வீடியோ பதிவு செய்து வரும் இர்ஃபான் வீடியோகளுக்கு பல மில்லியன பார்வையாளர்கள் இருந்து வருகின்றனர்.

திருமணம்

இந்நிலையில் கடந்த ஆண்டில் இர்ஃபானுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் இர்பான்.

தற்போது இர்ஃபான் மனைவி ஆலியா, கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ஆலியா கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர்.

நாம் மற்றும் நாங்கள்

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வகையில், ரம்ஜான் என்று அவர் சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லி இருந்தார். அதில் ‘நாம் மற்றும் நாங்கள்’ என்று கூறி மனைவியுடன் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.

இதை பார்த்து ரசிகர்கள், அப்படி என்றால் 2 பேர், 3 பேராகி விட்டார்களா, என்ற யூகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இர்ஃபான் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கிறார்.

அதில் நீங்கள் எல்லோருமே யூகம் செய்வது போல அது உண்மைதான். என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இப்போது ஏழு மாதம் முடிந்து விட்டது. எட்டாவது மாதத்தில் இருக்கிறார்.

சில மாதங்களாகவே ரசிகர்கள், அண்ணா அண்ணி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் மறைக்க வேண்டும் என்று சொல்லாமல் இருக்கவில்லை. சில மாதங்கள் போன பிறகு சொல்லலாம் என்றுதான் இருந்தோம், என்று இர்ஃபான் அதில் கூறியிருக்கிறார்.

இதையடுத்து தம்பதிக்கு, ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சந்தோஷமான பதில்

மனைவி கர்ப்பமா என்று கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு, யூட்யூபர் இர்ஃபான் ஆமாம், உண்மைதான் என சந்தோஷமான பதிலை சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.