Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அட கடவுளே.. எப்படி இருந்த மனுஷன்.. லோகேஷ் குடும்பத்தில் கும்மி அடிச்சுவிட்ட ஸ்ருதிஹாசன் கமல்..

Tamil Cinema News

அட கடவுளே.. எப்படி இருந்த மனுஷன்.. லோகேஷ் குடும்பத்தில் கும்மி அடிச்சுவிட்ட ஸ்ருதிஹாசன் கமல்..

தமிழ் சினிமாவில் இதுவரை 5 படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் முதல் படம் மாநகரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார்.

லோகேஷ் கனகராஜ்

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ தான் சொதப்பி விட்டது. வசூல் ரீதியாக 600 கோடி ரூபாயை கடந்திருந்தாலும் விமர்சன ரீதியாக பெரும்பாலான மக்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை.

அதிலும் இடைவேளைக்கு பிறகு இரட்டை பிறவி, நரபலி, கிளைமேக்ஸில் 300 பேரை அடித்து துவம்சம் செய்யும் விஜய் என, காதில் லாரி லாரியாக பூச்சுற்றியதால் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கே போய் விட்டனர்.

ரஜினி படம் ஸ்கிரிப்ட்

இப்போது ரஜினி 171 படத்துக்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு, கமல்ஹாசன் மகள் ரூபத்தில்தான் வந்தது பிரச்னை.

--Advertisement--

விக்ரம் படத்தில் நடித்த வகையில், படம் சிறப்பாக வந்து 300 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்ததால், லோகேஷூக்கு சொகுசு கார் வாங்கிக்கொடுத்தார் கமல். அவர் காட்டிய அந்த நன்றியை போல, நடிகர் கமலுக்கு நன்றியை , விசுவாசத்தை காட்டும் விதமாக மகள் ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் நடித்து கடும் விமர்சனத்தில் சிக்கி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

இதையும் படியுங்கள்: நம்ம குடும்பத்துக்கு இந்த சாவகாசம் வேணாம்பா.. கார்த்தி செஞ்ச வேலையை பாத்தீங்களா..?

நெருக்கமான காதல் காட்சிகளில்..

ஆக்‌ஷன் கிங் போல், தன் படங்களில் கேங்ஸ்டர் கதைகளில் மிரட்டிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக காதல் காட்சிகளில் நடித்ததை பார்த்து, அண்ணா லோகிண்ணா, என்னண்ணா இதெல்லாம் என்று அவரது ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ரியல் ஜோடியா?

நீ இப்படி பண்ணலாமாண்ணா என்றும் விமர்சிக்கின்றனர். இது ரீல் ஜோடியா, ரியல் ஜோடியா, கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆயிடுச்சு போல, சீக்கிரம் லிவிங் டூ ரிலேசன்ஷிப்புக்கு ரெடி ஆயிடுங்க, ஸ்ருதி அதுல எக்ஸ்பர்ட் என்றும் பலர் பங்கம் செய்து வருகின்றனர்.

ஸ்ருதியும் லோகேஷை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். லோகியை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என்று நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஒரே ஒரு முடிச்சு தான்.. குட்டியூண்டு உடையில் ஈஸ்டர் கொண்டாடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

பயங்கர டென்சன்

மேலும் இந்த இனிமேல் பாடல் காட்சியை உங்கள் மனைவி பார்த்தாரா, இயக்குனராக உங்களை பார்த்தவர், நடிகராக பார்த்து என்ன சொன்னார் என்று பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது, பயங்கர டென்சனாகி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

எனக்கும், உங்களுக்குமான தொடர்பே போதும். பாராட்டு, விமர்சனம் எதுவாக இருந்தாலும் என்னோடு இருக்கட்டும். என் குடும்பம் குறித்து எதுவும் வெளியே தெரிய வேண்டிய அவசியமில்லை. அதை துவக்கத்தில் இருந்தே நான் பின்பற்றி வருகிறேன் என கடுப்பாக கூறினார்.

குடும்பத்துல கும்மி அடிச்சிட்டாங்களே…

அதற்கு காரணம், ஸ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் நெருக்கமாக நடித்தது, அவரது வீட்டில் புகைச்சலை ஏற்படுத்தி பிரச்னை உருவாகி உள்ளது. அதனால் மன உளைச்சலில் இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷை பார்த்து நொந்து போன ரசிகர்கள், அடக் கடவுளே.. எப்படி இருந்த மனுஷன். இவர். லோகேஷ் குடும்பத்தில் புகுந்து இப்படி கும்மி அடிச்சுவிட்டுட்டாங்களே ஸ்ருதிஹாசனும், கமலும் என்று திட்டி வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top