“Wig விலையை கேட்டு மிரண்டுபோயிட்டேன்..” – கனா காணும் காலங்கள் தீபிகா Emotional பேச்சு..!

Kanaa Kaanum Kaalangal Deepika : கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தீபிகா. கனா காணும் காலங்கள் சீரியலில் ஹரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு நடன கலைஞராக சிறுவயதிலிருந்தே பல மேடைகளில் நடனமாடி இருக்கிறார். மட்டுமில்லாமல் ஒரு சில ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.

டிஸ்னி ப்லஸ் ஹாட் ஸ்டார் என்ற OTT தளத்தில் வெளியாகி உள்ள கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் ஹரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக மாடலிங் துறையில் அடி எடுத்து வைப்பதற்காக சில போட்டோ சூட்டுகளையும் நடத்தி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கனா காணும் காலங்கள் சீரியலில் நடிப்பு நடிக்கும் வாய்ப்பு குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

--Advertisement--

அந்த சீரியலில் நான் குட்டியான முடியை வைத்துக்கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். சமீபத்தில் தான் மொட்டை அடித்து நான் இவ்வளவு பெரிய முடி வளர்த்தேன்.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வேறு கிடைக்கும். அப்பொழுது மீண்டும் முடி வளர்க்க முடியாது. எனவே நான் விக் வைத்துக் கொள்கிறேன் என்று பட குழுவிடம் கூறினேன்.

எனவே விக் வாங்குவதற்காக சென்னையில் உள்ள கடைகளுக்கு சென்றேன் 500 ரூபாய் அல்லது 1500 ரூபாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் கூறிய விலையை கேட்டு எனக்கு மயக்கமாக வந்துவிட்டது. மிரண்டு போய் விட்டேன்.

ஒரு விக்கின் விலை ₹20,000, 25,000, ஒரு லட்சம் வரை கூறினார்கள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஒரு வழியாக விக் வாங்கி விட்டேன். அதன் பிறகு தான் எனக்கு இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இவருடைய அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.