துவக்கத்தில் நண்பர்கள் உதவியால் சில குறும்படங்களில் நடித்தவர் கவின். பின் சில டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிசெய்தார். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கவின்
தொடர்ந்து சரவணன் மீனாட்சி, சரவணன் மீனாட்சி 2 , தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் கவின் அதிக வரவேற்பை பெற்றார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் 2019ம் ஆண்டில் பங்கேற்றார்.
அதன்பிறகு சத்ரியன் படத்தில் துணை கேரக்டரில் நடித்தார். அடுத்து நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்த கவின் அடுத்து நடித்த படம் டாடா. இந்த படம் பெரிய அளவில் கவினுக்கு அடையாளத்தை கொடுத்தது.
இதையும் படியுங்கள்: வடிவேலு இதை பண்ணவே விட மாட்டான்.. மனுஷனே கிடையாது.. நடிகர் காதல் சரவணன் விளாசல்..!
அதன்பிறகு லிப்ட் என்ற படமும் கவினுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
ஆனால் இப்போது அதிக சம்பளம் கேட்டு தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் இழந்து வருகிறார் நடிகர் கவின்.
நடிக்க மறுப்பு
சுந்தர் சி இயக்கத்தில், கலகலப்பு 3 படத்தில் நடிக்க கவினுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் கேட்டுள்ளார். சுந்தர் சி ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதை கவின் ஏற்கவில்லை.
அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கவினிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தனக்கு சம்பளமாக ரூ. 5 கோடி கேட்ட நிலையில், அதற்கு வெற்றிமாறன் சம்மதிக்கவில்லை. ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியும் கவின் நடிக்க மறுத்துவிட்டார்.
எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும்
இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் நடிக்க வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மறுப்பது, எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் வெளிப்படையாக கவினை விமர்சித்து வருகின்றனர்.
சிம்புதான் முதன்முதலாக ஆடிஷன் பார்த்து என்னை செலக்சன் பண்ணினார். வேட்டை மன்னன்னு ஒரு படம் பண்ணி, அதுல கேப் இருந்துருக்குன்னு கூட எனக்கு தெரியாது.
அதுகூட கனா காணும் காலங்கள் முடிச்சு 5 மாசம்தான் கழிச்சுதான் எனக்கு தெரியும். அண்ணன்தான் அதை பண்ணியிருக்காருன்னு. அப்ப எல்லாம் அண்ணன் சில படங்கள், லைன்கள் பத்தி எல்லாம் சொல்வாரு.
நாங்க பேசுவோம். இதெல்லாம் எப்படி இருக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்கடான்னுவாரு.
வேட்டை மன்னன் காமிச்சாரு…
இது இப்படியே போயிட்டு இருக்கும்போது ஒருநாள் சரி வாங்கன்னு கூட்டிட்டு போனாரு. பர்ஸ்ட் வேட்டை மன்னன் போட்டு காமிச்சாரு.
தற்போது கூட வேட்டை மன்னன் படம் பாதி முடிந்து விட்டது. முதல் பாதி ரெடியாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்: தியேட்டர் கார்னர் சீட்டில்.. காதலனுக்கு இதை செய்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை அமலா பால்..
ஒருமுறை அந்த முதல் பாதியை பார்த்தபோது அந்த படத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.
ஆனால் அது கைகூடவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் கவின்.