Connect with us

“பொடுகுத் தொல்லையை விரட்டி அடிக்கும் இஞ்சி சாறு..!” – கவலையை விட்டு இத யூஸ் பண்ணுங்க..!

Dandruff Removing Ginger Juice, Ginger Juice, Sampoo, இஞ்சி சாறு, பொடுகு விரட்டும் இஞ்சி சாறு, ஷாம்பு

Beauty Tips | அழகு குறிப்புகள்

“பொடுகுத் தொல்லையை விரட்டி அடிக்கும் இஞ்சி சாறு..!” – கவலையை விட்டு இத யூஸ் பண்ணுங்க..!

கூந்தல் உதிர்தலுக்கு இன்று மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பொடுகு. இந்த பொடுகு தொல்லையிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்க பலரும் பல விதமான வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் மார்க்கெட்டில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் எந்தவிதமான மாற்றமும் தெரியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினால் கட்டாயம் பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

Dandruff Removing Ginger Juice, Ginger Juice, Sampoo, இஞ்சி சாறு, பொடுகு விரட்டும் இஞ்சி சாறு, ஷாம்பு

பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் தரும் இஞ்சி சாறு

மருத்துவ குணநலன்கள் நிறைந்த இஞ்சி சாறு எண்ணற்ற பயன்களை மனிதர்களுக்கு கொடுக்கிறது. அந்த வரிசையில் கூந்தலில் ஏற்படுகின்ற பொடுகை நீக்கக்கூடிய ஆற்றல் அற்புதமான இஞ்சிக்கு உள்ளது. இந்த இஞ்சி இயல்பாகவே பாக்டீரிய எதிர்ப்பு குணங்களை கொண்ட பொருளாகும்.

Dandruff Removing Ginger Juice, Ginger Juice, Sampoo, இஞ்சி சாறு, பொடுகு விரட்டும் இஞ்சி சாறு, ஷாம்பு

எனவே ஆன்ட்டி பாக்டீரியல் பொருளான இஞ்சியை உங்கள் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துவதினால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.

உங்கள் தலையில் பொடுகு அதிகமாக இருக்கக்கூடிய பகுதியில் இந்த இஞ்சி சாறினை எடுத்து முடியின் வேர்கால்கள் வரை செல்லும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்து விடவும். இதன்மூலம் உங்களுக்கு முடி உதிர்வு இருந்தால் முடி உதிர்தல் நிற்பதோடு உங்களது பொடுகு தொல்லைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Dandruff Removing Ginger Juice, Ginger Juice, Sampoo, இஞ்சி சாறு, பொடுகு விரட்டும் இஞ்சி சாறு, ஷாம்பு

இஞ்சிச்சாறினை நன்கு மசாஜ் செய்து விடுவதால் இது உங்கள் ph அளவை மேம்படுத்துவதோடு ரத்த ஓட்டத்தை உச்சந்தலையில் அதிகப்படுத்தும். மேலும் உச்சந்தலையில் இருக்கும் உலர்ந்த செதில் திட்டுக்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும்.

அட இஞ்சி சாறை எடுத்து தடவுவதா என்று யோசிக்க கூடிய நபர்களுக்கு இன்று இஞ்சியை அடிப்படையாகக் கொண்ட ஷாம்பு சந்தையில் வந்துள்ளது.அதனை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.

Dandruff Removing Ginger Juice, Ginger Juice, Sampoo, இஞ்சி சாறு, பொடுகு விரட்டும் இஞ்சி சாறு, ஷாம்பு

வாரத்தில் இரண்டு முறை இஞ்சி சாறினை உங்கள் தலையில் தேய்த்து பயன்படுத்துவதன் மூலம் கட்டாயம் நீங்கள் பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை அடைய முடியும். இந்த முறையை நீங்கள் ஃபாலோ செய்து பார்த்து அதனால் கிடைக்கும் பயன்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top