Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெ**டு.. இது என்ன மா..? லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் காயத்ரி..!

Tamil Cinema News

உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெ**டு.. இது என்ன மா..? லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் காயத்ரி..!

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் இயக்கிய அத்தனை படமும் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் 2017 மாநகரம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.


தொடர் வெற்றிகளை குவித்த லோகேஷ்:

படத்தின் கதை ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தில் அவரின் வித்தியாசமான கண்ணோட்டமும், காட்சிகளை வரிசைப்படுத்திய விதமும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

அந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்து.

இதையும் படியுங்கள்: பிளாஸ்டிக்கில் உள்ளாடையா..? அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? ஷில்பா ஷெட்டியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

--Advertisement--

கைதி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ்.

விஜய் & லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளிவந்திருந்த மாஸ்டர் திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்தது அந்த படத்தில் லோகேஷ் கௌரவத் தோற்றத்தில் கூட நடித்திருப்பார்.

அந்த படத்தை தொடர்ந்துகமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி டபுள் மடங்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.

அந்த படத்தை பார்த்து கமல் ஹாசனே பிரம்மித்துபோனார். தோல்வி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது என சொல்லும் அளவிற்கு லோகேஷ் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி தொடர் வெற்றிகளை குவித்து வந்தார்.

அதை எடுத்து லியோ படத்தை கடைசியாக இயக்கினார். இப்படத்தில் விஜய் திரிஷா இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: வாலிபரை சரமாரியாக தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா.. இது தான் காரணமாம்..

இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கந்தராஜ் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க போகிறார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில்…

ஹீரோவாக களமிறங்கிய லோகேஷ்:

நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ஆம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அவர் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.

அதாவது இசை ஆல்பம் ஒன்றில் இவர் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த பாடலில் அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான் நடித்திருக்கிறார்.

இனிமேல் பாடலின் இசை காணொளிக்கு புவன் கவுடா ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். பிலோமினே ராஜ் எடிட்டராகவும் பணியாற்றி இருக்கிறார். ஸ்ரீராம் ஐயங்கார் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.

இந்த பாடலுக்கு “இனிமேல்” என தலைப்பு வைத்துள்ளனர். இனிமேல் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


ஸ்ருதி ஹாசனுடன் படுக்கையில் லோகேஷ்:

இதில் லோகேஷ் படு மோசமாக ரொமான்டிக் சீன்களில் ஸ்ருதி ஹாசன் உடன் புகுந்து விளையாடியுள்ளார். இதை பார்த்த நடிகை காயத்ரி ஷங்கர…

உங்களது படங்களில் ரொமான்ஸ்க்கு இடமே இருக்காது. அப்படியே இருந்தாலும் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டால் அவர்களுடைய தலையை வெட்டி போட்டுடுவீங்க…

இதையும் படியுங்கள்: 72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…

ஆனால், நீங்க மட்டும் இப்படி ரொமான்ஸ் பண்ணலாமா? வாட் இஸ் திஸ்?என லோகேஷிடம் காயத்ரி கேள்வி கேட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடக்க காயத்ரி ஷங்கர் நடித்திருந்தார். அந்த படத்தில் கடைசியில் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top