Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன பார்த்ததும் தோனி சொன்னது இது தான்..! லவ் டுடே இவானா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் தான் நடிகை இவானா. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஆன இவர் மலையாள திரைப்படங்களில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் இவானா.

நடிகை இவானா:

வெறும் 24 வயது ஆகும் இவானா மிகவும் இளம் வயதிலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடுத்தக்கது.

முதன் முதலில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த “நாச்சியார்” திரைப்படத்தில் தான் இவானா நடித்திருந்தார் .

---- Advertisement ----

அந்த திரைப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் . அந்த திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா தான் என்றாலும் இவானாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .

அவ்வளவு ஏன் ஜோதிகாவே மேடையில் இவானா தான் இப்படத்தின் ஹீரோயின் என்ற அளவுக்கு அவரின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி தள்ளி இருந்தார்.

நாச்சியார் படத்தில் அறிமுகம்:

முதல் படமே அவருக்கு வேற லெவலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

ஆனால், அவரோ நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என சில படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த இளம் ரசிகர்களின் மனதை வென்றவர் ஆக பார்க்க பட்டார்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் அவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவரது மார்க்கெட்டும் உச்சத்தில் போய் உட்கார்ந்து.

அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவானா.

காதல் காமெடி திரைப்படமான LGM திரைப்படத்தில் நடிகை நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்திருந்தார்கள் .இந்த திரைப்படத்தை. தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார் .

தோனியை சந்தித்த அனுபவம்:

இந்த நிலையில் நடிகை இவானா இப்படத்திற்காக தோனியை முதன் முதலில் சந்தித்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

LGM படத்தின் ஆடியோ லான்ச் இன் போது தான் நான் தோனியையும் அவரது மனைவி சாக்ஷியையும் சந்திக்க நேர்ந்தது.

அந்த நேரத்தில் தோனி சாரை மீட் பண்ண கோடிக்கணக்கான ரசிகர்கள் அங்கு காத்திருந்தபோது. எனக்கு அவரை சந்திக்க ஒரு சான்ஸ் கிடைத்ததே மிகப் பெரிய விஷயமாக பார்த்தேன்.

அப்ப எனக்கு ரொம்ப படபடப்பாக இருந்துச்சு. ஒரு பயத்தோடு தான் அவரை சந்தித்தேன். அந்த நேரத்தில் பேச்சு எதுவுமே எனக்கு வரவில்லை .

ஆனால், அவர் ரொம்ப சாஃப்ட்டா ஸ்வீட்டா பேசினாரு. ஆனால் ஒரே ஒரு விஷயம்…. அவர் என்ன பார்த்த உடனே I Don’t like you அப்படின்னு சொல்லிட்டாரு. அது எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு.

உடனே நான்… ஏன் சார்? என்ன ஆச்சு? என கேட்டேன். அந்த படத்தில் என்னுடைய கேரக்டர் அம்மாவையும் பையனும் கொஞ்சம் தனித்தனியா பிரிக்க பார்ப்பேன்.

முகத்திற்கு நேராக தோனி பிடிக்கலன்னு சொன்னார்:

அந்த ஒரு காட்சி அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஏனென்றால் தோனி அம்மா மகன். அவருக்கு அம்மா என்றால் அவ்வளவு பிடிக்கும். அதனால் நான் அது போன்ற காட்சியில் நடித்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை தான் I Don’t like you எனக் கூறியிருந்தார்.

இப்படித்தான் எங்கள் சந்திப்பு நேர்ந்தது. அவரை சந்தித்த அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என இவானா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

இது பழைய பேட்டியாக இருந்தாலும் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top