Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

முழுசா நம்பி அடி வாங்கிட்டேன்.. மதுரை முத்துவின் இரண்டாம் மனைவி பகீர்..!

ஸ்டாண்ட் அப் காமெடியனாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் தான் மதுரை முத்து. இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனார்.

காமெடியனாக தனது சிறப்பான பணியை செய்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்தையும் ஈத்தவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

மதுரை முத்து:

குறிப்பாக கலக்கப்போவது யாரு அசத்தப்போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் மதுரை முத்துவின் பெர்பார்மன்ஸ் வேற லெவலில் இருந்தது என்று சொல்லலாம்.

அவரது காமெடிக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் அவருக்கு இருக்கிறார்கள். அத்துடன் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

--Advertisement--

பட்டிமன்றங்களில் இவர் பேசும் எதார்த்தமான பேச்சும் கலகலப்பான காமெடி பேச்சும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த மனம் கவர்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.

மதுரையில் கல்லக்குடி அரசப்பட்டு என்ற ஊரில் பிறந்த முத்துவுக்கு லேகா என்ற ஒரு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்து ஒன்றில் மனைவி லேகா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டார்.

முதல் மனைவி திடீர் மரணம்:

அவர் உயிரிழக்கும் போது வயது 32. மனைவியின் திடீர் விபத்திலிருந்து மீள முடியாத மதுரை முத்து அந்த சோகத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தார்.

அதன் பின்னர் பெற்றோர் மற்றும் நண்பர்களின் அறிவுரையால் அவருக்கு மறுமணம் நடத்தி வைத்தார்கள்.

இறந்த மனைவி லேகாவின் நெருங்கிய தோழி “நீது” என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.

அவரது இரண்டாவது மனைவி நீது ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் மனைவி பிள்ளைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் மதுரை முது.

இப்படியான நேரத்தில் அவரது இரண்டாவது மனைவியான நீது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வரும் சோகமான பதிவு தற்போது பேசு பொருளாகியுள்ளது.

அதாவது, எனக்குன்னு ஒரு உயிர் வேணும் அந்த உயிர் என்ன மட்டுமே நேசிக்கணும். ஆனால், நான் அப்படி எதிர்பார்த்தது நடக்கவே இல்ல.

முழுசா நம்பி அடி வாங்கிட்டேன்:

பலமுறை நான் ஏமாந்துகிட்டே இருக்கேன் அவங்க நம்மளை ஏமாத்துறாங்க, அடிக்கிறாங்க துன்புறுத்துறாங்க அப்படின்னு தெரிஞ்சாலும் கூட அந்த நபரை நம்மால் விட்டுப் போகவே முடியல.

எந்த ஒரு எல்லைக்கு பிரச்சினைகள் சென்று முடிந்தாலும் அவரை விட்டுப் போக வேண்டும் என்ற மனசே வரவில்லை.

பலமுறை காயப்பட்ட போதும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் துளி கூட நினைச்சதே கிடையாது. ஏனென்றால் இந்த உலகத்திலேயே ரொம்ப அதிகமான பிடிச்சமான நபராக அவர் இருக்கிறார்.

இது அவரது கணவர் முத்துவை தான் மறைமுகமாக கூறியிருக்கிறார் என பலர் கூறுகிறார்கள்.

மேலும் மருத்துவமனையில் டிப்ஸ் ஏற்றிக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு மிகவும் சோகமான வருத்தமான பதிவுகளை போட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் மதுரை முத்துவிற்கும் அவரது இரண்டாவது மனைவி நீதுவுக்கும் ஏதேனும் பிரச்சனையா?

அல்லது குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதேனும் பிரச்சனையா? என கேள்வியாக எழுப்பி வருகிறார்கள்.

விஷயம் என்ன என்பது பற்றி மனைவி நீதுவோ அல்லது மதுரை முத்துவோ வெளிப்படையாக பேசினால் மட்டுமே என்ன நடந்தது என தெரியவரும்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top