இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? இதோ புகைப்படம்..!

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். சில படங்களை பார்த்தவுடன், அந்த பிரபல நடிகர் அல்லது நடிகையின் முகச்சாயல் தெரிந்து விடும். சிலரை கண்டுபிடிக்கவே முடியாது.

அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக இருந்து வரும் ஒரு கதாநாயகியின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

மலையாள படங்கள்

கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில் மலையாள படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரமயுகம், பிரேமலு, ஆவேசம் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த படங்கள், ரசிகர் மனங்களில் பலத்த வரவேற்பை பெற முக்கிய காரணம், அந்த படங்களில் உள்ள சிறப்பான கதையும், திரைக்கதையும்தான்.

உதாரணமாக மஞ்சும்மெல் பாய்ஸ் படம் மிக மிக சாதாரணமான கதைதான். எர்ணாகுளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு 12 நண்பர்கள் ஒரு ஜாலியான சுற்றுலாவாக கொண்டாட்டமாக வருகின்றனர்.

--Advertisement--

அப்போது கொடைக்கானல் மலை மீது குணா குகையில் உள்ளே சென்று, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சென்று பார்த்து, வியக்கின்றனர்.

இந்த குணா குகை, நடிகர் கமல்ஹாசன் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் நடித்த குணா படத்தில் இடம்பெற்ற குகை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அந்த குகைக்கு, குணா குகை என்றே வைக்கப்பட்டுள்ளது. குணா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், இந்த குகையும் அதில் பிரபலமடைந்துவிட்டது.

மஞ்சும்மெல் பாய்ஸ்

இந்நிலையில், மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் குணா குகைக்கு செல்லும் நண்பர்கள் கூட்டத்தில், ஒருவர் அந்த குகைக்குள் தவறி விழுந்து விடுகிறார். டெவில் கிச்சன் என்று அழைக்கப்படும் அந்த ஆபத்தான பகுதிக்குள் சென்றவர்கள் மீளவே முடியாது. மீண்டும் வர முடியாது என்ற விபரீதமான சூழ்நிலையில், அந்த நண்பர்களே ஒன்று சேர்ந்து, அந்த நண்பனை உயிருடன் காப்பாற்றி மீட்கின்றனர்.

இந்த படத்தின் கதை, ஒரு வரியில் சொல்லக்கூடிய சாதாரண கதையாக இருந்தாலும், இதை பல திருப்பங்களோடும், சுவாரசியமாக காட்சியமைப்புகளுடனும் எடுக்கப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

குறிப்பாக 5 கோடி ரூபாயில் இடம் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 225 கோடி ரூபாய் வரை வசூல் உள்ளது. அது தவிர வரும் மே 5ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமலு

அதேபோல் மற்றொரு முக்கிய திரைப்படமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பிரமேலு. இந்த படத்திலும் கதாநாயகன், கதாநாயகி யாருமே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் இல்லை என்கிற போதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 135 கோடி ரூபாய் வரை வசூலி்ல சாதனை புரிந்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளது. அந்த படத்தில் நடித்த நடிகைதான் மமிதா பைஜூ. இவர் இந்த படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மமிதா பைஜூ

இவரது யதார்த்தமான அழகும், வசீகரமான சிரிப்பும், குறும்புத்தனமான பார்வையும், குறுகுறுப்பான முகபாவங்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இப்போது இணையத்தில் உலா வரும் இந்த சிறு வயது புகைப்படத்தில் மமிதா பைஜூம், அவருடைய சகோதரரும் இருக்கின்றனர்.

மமிதா பைஜூ, பிரேமலு படத்தை தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவரும் ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து அயலான் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்திலும் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அசந்து போன ரசிகர்கள்

இந்நிலையில் மமிதா பைஜூவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜூதான் என அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.