திருமணமான பெண்கள் Google-ல் அதிகம் தேடக்கூடிய விஷயங்கள்..! – உறைந்து போன இணையவாசிகள்..!

கூகுளில் பல்வேறு விசித்திரமான விஷயங்கள் தேடப்பட்டிருக்கின்றன அந்த வகையில் திருமணமான பெண்கள் அதிகமாக கூகுளில் தேடக்கூடிய விஷயங்கள் என்ன என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் ஏதாவது ஒரு விஷயம் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால் அடுத்த வார்த்தையே கூகுள்ல பாரு என்பதுதான்.

அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி போய் கிடக்கிறது. எதுவாக இருந்தாலும் உடனே உங்களிடம் கேட்டு விடும் பழக்கம் மக்கள் மத்தியில் இருந்திருக்கின்றது.

நண்பர்களிடம் கேட்க முடியாத கேள்விகளை கூட கூகுளில் கேட்டு தங்களுக்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது.

அந்த வகையில் வருடா வருடம் கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற அறிக்கைகள் வெளிவருகின்றன. சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் திருமணமான பெண்கள் அதிகம் தேடுவது என்ன..? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

--Advertisement--

அதன்படி கீழே வரக்கூடிய நான்கு விஷயங்கள் முதலிடம் பிடித்திருக்கின்றன.

  • கணவருக்கு எது பிடித்திருக்கிறது.. என எப்படி தெரிந்து கொள்வது?
  • கணவரை எப்படி அடிமைப்படுத்துவது..?
  • கணவரின் மனதை வெல்வது எப்படி..?
  • கணவனை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி..?

இவைதான் கூகுளில் திருமணமான பெண்கள் அதிகம் தேடக்கூடிய விஷயம் கணவனை தங்கள் பிடியில் வைத்திருப்பது பற்றி தான் பெண்கள் அதிகமாக தேடுகிறார்கள் என்பதை கூகுள் தேடல்கள் நமக்கு காட்டுகின்றன.

மட்டுமில்லாமல் இன்னும் சில விஷயங்களும் திருமணமான பெண்களால் அதிகம் தேடப்படுகிறது. அவை,

  • குடும்ப கட்டுப்பாடு எப்போது செய்து கொள்ள வேண்டும்..?
  • குழந்தை பெற சரியான நேரம் எது..?
  • குடும்ப கட்டுப்பாட்டுக்காக ஒருவர் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்..?
  • கணவரை எப்படி அரவணைப்பது..?

திருமணமான மனைவி எப்படி தன்னுடைய கணவனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவாள்..?

உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட கீ வோர்டுகளை திருமணம் ஆன பெண்கள் தேடி இருக்கின்றனர்.