தன் கருமுட்டையை வெளியே எடுத்து.. தனுஷ் பட நடிகை செய்த வேலை.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

சமீபமாக இந்திய சினிமா துறையில் ஒரு மோசமான கலாச்சாரம் பரவி வருகிறது. அதாவது திருமணத்தை தள்ளிப்போட சில இளம் நடிகைகள் நினைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், இன்னும் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர்.

திருமணத்தை பல ஆண்டுகள் தள்ளிப் போடும் நடிகைகள்

சில நடிகைகள் தங்களது திருமணத்தை 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுகின்றனர். அதனால் 35 வயது, 40 வயது. 45 வயதுகளில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அப்போது குழந்தை பிறப்பதற்கான உடல் தகுதி அவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை.

ஏனெனில் 40 வயதுக்கு பிறகு, உடல் ரீதியாக பலவீனமடைந்த நிலையில் பிள்ளை பேறு என்பது அவர்களுக்கு பல விதங்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

கருமுட்டை சேமிப்பு

அதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக இப்போது, இளம் வயதாக இருக்கும் போதே, தங்களது கரு முட்டைகளை எடுத்து சேமித்து வைக்கும் ஒரு புதிய பழக்கம் இளம் நடிகை மத்தியில் அதிகரிக்க துவங்கி உள்ளது.

--Advertisement--

நடிகை மெஹ்ரின் பிர்சாதா என்ற நடிகையின் தந்தை விவசாயம், ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்கிறார்.

அம்மா இல்லத்தரசி. சீக்கியத்தை சேர்ந்த மெஹ்ரின் பர்சாதா, தனக்கு 10 வயது இருக்கும்போதே, ராம்ப் வாக் செய்து கசௌலி இளவரசி பட்டம் வென்றவர். கனடாவில் டொராண்டோவில் நடந்த போட்டியில் மிஸ் பர்சனாலிட்டி பட்டம் வென்றவர்.

மாடல் அழகியாகவும், நிறைய விளம்பர படங்களிலும் மெஹ்ரின் பர்சாடா நடித்துள்ளார்.

நானிக்கு ஜோடியாக…

கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு படமான கிருஷ்ண காடி வீர பிரேம கதா மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மகாலட்சுமி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தின் அவரது நடிப்பு பலத்த பாராட்டை பெற்றது.

இதைச் தொடர்ந்து இந்தியில், சூரத் சர்மாவுக்கு ஜோடியாக பிலௌரி என்ற படத்தில் அனு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.

அதன்பிறகு, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த மெஹ்ரின் பர்சாதா, நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்தார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த், சூரி, ஹாரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஆண்டனி தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், தோல்வி படமாக அமைந்தது.

தனுஷ் ஜோடியாக…

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் தனுஷ் ஜோடியாக மெஹ்ரின் பர்சாதா நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடியது.

கருமுட்டையை சேமித்திருக்கிறேன்…

இந்நிலையில் நடிகை மெஹ்ரின் பர்சாதா கருமுட்டை குறித்து வெளிப்படையாக, சமீபத்தில் பேசி உள்ளார்.

அதில், நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை திருமணம் குறித்து எந்த முடிவு எடுக்காததால், எனது கருமுட்டைகளை டாக்டரின் உதவியுடன் மருத்துவ ரீதியாக சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். குழந்தை பிறப்பை தள்ளி போட நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.