கிளாமரா நடிச்சப்போ என் பின்னாடி அப்படி பண்ணாங்க.. மும்தாஜ் ஓப்பன் டாக்..

கிளாமரா நடிச்சப்போ என் பின்னாடி அப்படி பண்ணாங்க.. மும்தாஜ் ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் மிக அழகான நடிகைகள், கதாநாயகிகளாக அறிமுகம் ஆகி இருந்தாலும், ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் கவர்ச்சி நடிகைகளாக மாறி விடுவர். அல்லது சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவர்களை அந்த நிலைக்கு மாற்றி விடுவர்.

அப்படி எத்தனையோ திறமைசாலி நடிகைகள், கவர்ச்சி நடிகைகளாக மாறி, கவர்ச்சி காட்டி குத்தாட்டம் போட்டு விட்டு தமிழ் சினிமாவை விட்டுச் சென்றதுண்டு. இதில் கொடுமை என்னவென்றால், தமிழ் படத்திலேயே ஒரு நடிகை கவர்ச்சி காட்டி நடித்து விட்டால் மற்ற மொழி படங்களிலும், அவருக்கு கவர்ச்சி ரோல்களே கிடைக்கும் என்பது எழுதப்படாத விதி.

மும்தாஜ்

கடந்த 1999ம் ஆண்டில் மோனிஷா என் மோனாலிஷா என்ற படம் மூலம் இயக்குநர் டி ராஜேந்தர் அறிமுகப்படுத்திய நடிகை தான் மும்தாஜ். சில படங்களில் துணை நாயகியாக நடித்த அவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு அமையவில்லை.

இதையும் படியுங்கள்: ஜாடிக்கு ஏத்த மூடி.. துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை.. யாருன்னு பாருங்க..

--Advertisement--

கட்டிப்புடி கட்டிப்புடிடா

அதனால் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதன்பிறகு கவர்ச்சி நடிகை முத்திரை குத்தப்பட்டு, அதன் பிறகு தமிழில் அவர் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில்தான் நடித்தார்.

மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம், சாக்லேட், விவரமான ஆளு, ஏழுமலை, லண்டன், வீராச்சாமி, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

மல மல மல மல

இதில் சாக்லேட் படத்தில் இடம்பெற்ற மல மல மல மல மருதமலை என்ற பாடல், பெரிய அளவில் மும்தாஜூக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது. ராஜாதி ராஜா உள்ளிட்ட சில படங்களில் வில்லி கேரக்டரிலும் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மும்தாஜ் நடிப்பதில்லை. நடிப்பை விட்டு முற்றிலும் விலகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

மோசமாக பேசினார்கள்

இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மும்தாஜ்,
நான் கவர்ச்சியாக நடிக்கும்போது என் முன்னாடி நன்றாக புகழ்ந்து பேசியவர்கள், அதற்கு பின்னாடி, என்னை பற்றி மோசமாக பேசினார்கள். இது என் நண்பர்கள் மூலம் தெரிய வந்தது.

கிளாமரா நடிச்சப்போ…

இப்போது இஸ்லாம் மதத்துக்குள் நான் முழுமையாக உள்ளே போனதற்கு பிறகு என் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். என்று கூறியிருக்கிறார் நடிகை மும்தாஜ்

கிளாமரா நடிச்சப்போ முன்னாடி பாராட்டி பேசிட்டு, என் பின்னாடி மோசமா பேசுனாங்க என்று தனக்கு நேர்ந்த அனுபவத்தை மும்தாஜ் ஓப்பனாக இதில் கூறியிருக்கிறார்.