Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீங்க பொது சொத்து.. அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..

Tamil Cinema News

நீங்க பொது சொத்து.. அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..

சினிமா திரையில் நடிக்க கூடிய நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கும் நீலிமா ராணிக்கும் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியல்களில் மட்டும் அல்லாமல் சிறப்பாக தனது நடிப்பை வெளித் திரையிலும் காட்டியவர்.

இதையும் படிங்க: குடி போதையில் பந்து நடிகை.. மேலே ஒண்ணுமே போடாமல் வெறும் உள்ளாடையுடன் கார் பார்கிங்கில் ரகளை..

இவர் சிவாஜி மற்றும் கமலஹாசனின் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து சில திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர்.


நீலிமா ராணி..

தற்போது இசைவாணன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருக்கும் நீலிமா ராணி பல சீரியல்களில் மட்டுமல்லாமல் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம், மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் ஏறக்குறைய 15-க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அத்தோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனை கிளி, ஜீ தமிழில் வந்த தலையணை பூக்கள் போன்ற சீரியலில் நடித்திருந்தார்.

--Advertisement--


இவரது நடிப்பை பார்ப்பதற்கு என்று ரசிகன் வட்டாரம் ஒன்று இருந்தது என்று சொல்லலாம். அது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் தான் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பொது சொத்து.. அவங்க யூஸ் பண்ணுவாங்க..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா ராணி எந்த ஒரு நடிகையும் நடிகரும் சமூகத்தின் பொதுச்சொத்து என்று பேசியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அந்த ரசிகர்களை பார்த்து பிரபலமாக இருக்கக்கூடிய பிரபலங்கள் இதைத்தான் கேட்க வேண்டும் அதைக் கேட்கக் கூடாது என்றெல்லாம் கூறுவது வரை முறைக்கு உள்ளானது அல்ல என்பது போல பேசி இருக்கிறார்.

மேலும் இந்த அளவு பிரபலங்களாக மாற காரணமானவர்கள் ரசிகர்கள் தான். அவர்கள் நினைத்ததால் தான் இந்த இடத்தில் நம்மால் வந்து அமர்ந்து பேச முடிகிறது. மேலும் அவங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சு தான் நம்மை இந்த அளவு வளர்த்தி விட்டிருக்கிறார்கள்.

எனவே ரசிகர்கள் நம்மை பார்த்து இந்த கேள்வி எழுப்பினால் நீ யார் அதை கேட்பதற்கு என்று நாம் சொல்ல முடியாது அல்லவா? இதனை தன்னை நேர்காணல் காணும் யாராக இருந்தாலும் நான் அப்படித்தான் நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.


அது போலவே பேட்டி எடுக்கக்கூடிய சமயத்தில் எந்த ஒரு VJ-வும் என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக நினைப்பதினால் தான் பல்வேறு விதமான கேள்விகளை அவர்களால் கேட்க முடிகிறது. எனவே அவர்கள் கேட்கும் சிக்கலான கேள்விகளுக்கு நீங்கள் கேட்க வேண்டாம் என்று நான் சொல்ல முடியாது என்பது போல பேசி இருக்கிறார்.

ஓப்பன் டாப் தந்த நீலிமா ராணி..

இதனை அடுத்து அந்த பேட்டியில் தொகுப்பாளினி ஒரு புரிதலோடு எல்லா கேள்விகளுக்கும் பக்காவான பதிலை அளித்து இருப்பதாக தெரிவிக்கிறார். அதற்கு பதில் அளித்த நீலிமா ராணி வாழ்க்கையை ஒரு புரிதலில் தான் செல்கிறது. அந்த புரிதல் சிறப்பாக இருக்கக்கூடிய பட்சத்தில் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று பதிலளித்தார்.

மேலும் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வதும், விட்டுக் கொடுப்பதும் மிகவும் முக்கியமானது. அதன் மூலம் நாம் வாழ்வாங்கு வாழலாம் என்று சொன்ன விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.


இதையும் படிங்க: முக்கிய புள்ளி வீசிய வலையில் சிக்கிய Fish நடிகை.. வீதிக்கு வந்த ரகசியம்..

இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இதனை பேசும் பொருளாக மாற்றிவிட்டார்கள் என கூறலாம். நீங்க பொது சொத்து அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க என்று ஓப்பன் ஆக நீலிமா ராணி பேசிய பேச்சு தற்போது வைரல் ஆகிவிட்டது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top