அம்மாவுக்கு இந்த பிரச்சனை.. நினைத்து நினைத்து பல நாள் அழுதிருக்கேன்.. பரிதாபங்கள் கோபி வேதனை..!

டெக்னாலஜி கிடுகுடுவென வளர்ந்து வந்த வேகத்திலேயே திறமையுள்ள பல இளைஞர்கள் YouTube சேனல்களை துவங்கி அதன் மூலம் தங்களுக்கு திறமை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதவிதமான கன்டென்ட் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்தது மூலம் பல இன்று பல YouTubers பிரபலமான நட்சத்திரங்கள் ரேஞ்சுக்கு புகழ் பெற்று விட்டார்கள்.

யூடியூப் பிரபலம் கோபி:

அப்படி பிரபலமானவர்களாக பார்க்கப்படுபவர்கள் தான் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின்னர் ஒன்றாக தனது திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்றுவிட்டார்கள்.

பின்னர் தங்களது திறமையின் மூலமாக சென்னைக்கு வந்து ஏதாவது ஒன்று செய்து குடும்பத்திற்கு பலனாக இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் YouTube ஆரம்பித்தார்கள்.

---- Advertisement ----

இவர்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள், அரசியல், அன்றாடம் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி தங்களது YouTube இல் காமெடியாக வீடியோக்களாக வெளியிட்டு பிரபலம் ஆனார்கள்.

எந்த ஒரு சீரியசான விஷயமாக இருந்தாலும் கிண்டல் அடித்துப் பேசி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றனர்.

அன்றாடம் நாட்டில் நடக்கும் சம்பவங்களை காமெடியாக கலகலப்பாக பேசி கிண்டல் அடித்து மக்களின் மனம் கவர்ந்த பிரபலங்களாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் டெம்ப்ளேட்டாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பட்டது.

பரிதாபங்கள் கோபி பேட்டி:

அதன் மூலம் இவர் உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டார்கள். இவர்களது வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கோபி சுதாகரின் வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களா? என யோசிக்கும் அளவுக்கு தற்போது கோபி சமீபத்திய பேட்டி ஒன்றில் எமோஷ்னலாக பேசினார்.

அம்மாவை குறித்து மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

அண்மையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இவர்கள் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில். சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பரிதாபங்கள் கோபி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயத்தை பற்றி கூறியதாவது ,

வறுமையில் வாடிய குடும்பம்:

என்னுடைய குடும்பம் மிகவும் சாதாரணமாக வறுமையில் வாடிய எளிமையான குடும்பம் தான். சின்ன வயசுல இருந்தே எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்தது.

நான் எல்லா விதத்திலும் என்னுடைய அப்பா அம்மாவுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்படின்னு நினைப்பேன்.

நல்ல மதிப்பெண் எடுத்தா என்னோட அப்பா அம்மா கிட்ட காசு இல்லன்னா கூட எதையாவது ஒன்னு பரிசா வாங்கி கொடுத்து என்ன ரொம்ப சந்தோஷப்படுத்துவாங்க.

அந்த பரிசுகள் தான் என வாழ்க்கையில் நல்ல நிலைக்கு இன்னும் போகணும் அப்படின்னு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்திச்சு .

அவர்கள் கொடுக்கும் பரிசு என்ன அடுத்தடுத்த லெவலுக்கு இன்னும் நல்லா படிக்கணும் என்ற ஒரு ஆர்வத்தையும் எனக்கு கொடுத்துச்சு.

அந்த அளவுக்கு என்னோட அப்பா அம்மா எளிமையா இருந்தாலும் கூட எங்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைச்சாங்க .

சென்னைக்கு வந்த புதிதில்:

அந்த நேரத்துல நான் எப்படியாவது அம்மாவுக்கு படிச்சு மிகப்பெரிய ஆளாகி ஏதாவது செய்யணும் அப்படின்னு நானும் என்னுடைய நெருங்கிய நண்பருமான சுதாகரும் எங்களது சொந்த ஊரான திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தோம்.

சென்னைக்கு வந்து இங்கே ஏதேதோ வேலைகளை செஞ்சோம். அந்த சமயத்துல ஆரம்பத்துல எங்களால வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாததை நினைத்து நாங்க ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கோம்.

ஆனால் இப்ப நாங்க ரெண்டு பேருமே ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறோம். எனக்கும் திருமணம் ஆகிடுச்சு.

அப்பா அம்மாவை சென்னைக்கு கூப்பிட்டு வந்து எங்களோட குடும்பத்தோட வாழ்ந்துட்டு இருக்கிறோம்.

என்னோட அப்பாவுக்கு மிகப்பெரிய ஆசை கனவு எதுவுமில்லை. ஆனால் என்னோட அம்மாவுக்கு உடல் ஒரு சிறிய பிரச்சனை.

சின்ன வயசுல இருந்தே அவங்க காதில் கோழி இறக்கை வைத்து காதை சுத்தப்படுத்தும் ஒரு பழக்கம் வச்சிருந்தாங்க.

அந்த பழக்கம் நாளடைவில் அதிகமானதால அவங்களுக்கு காது கேட்காமல் போயிடுச்சு. இதை நினைத்து நான் ரொம்ப வருத்தப்பட்டு பல நாள் அழுதிருக்கேன்.

அவங்களுக்காக எதுவும் பண்ண முடியலை என்ற ஒரு வருத்தம் எனக்குள் இருந்துட்டே இருந்துச்சு. ஆனால் இன்னைக்கு நான் நல்லா சம்பாதிக்கிறேன்.

காது கேட்காத அம்மா:’

அதுக்காக நான் சம்பாதிச்ச பிறகு ரூ.800000த்தில் காது கேட்கும் மெஷின் வாங்கிக் கொடுத்தேன்.

அதை பார்த்து எங்க அம்மா ரொம்ப மகிழ்ச்சி அடைந்து சந்தோஷப்பட்டு ஏன் இவ்வளவு செலவு பண்ணி இந்த பொருளை வாங்கி கொடுக்குற அப்படின்னு பலமுறை என்கிட்ட கேட்டு இருக்காங்க.

அந்த அளவுக்கு என் அம்மாவுக்கு தேவை என்றாலும் கூட அதை நாங்க கஷ்டப்பட்டு வாங்கி கொடுக்குறோம் அப்படிங்கற ஒரு உணர்ச்சியிலே ஏன் பண்ற என்று கேட்டுகிட்டு இருக்காங்க என்று தன்னுடைய அம்மாவை பற்றியும் தனது குடும்ப வறுமையை பற்றியும் கோபி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

எல்லோரையும் கலகலப்பாக பேசி காமெடி செய்து சிரிக்க வைக்கும் கோபியின் வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களா என பலரும் மன வருத்தத்தோடு இந்த பதிவை ஷேர் செய்து வருகிறார்கள்.

---- Advertisement ----