நடுக்காட்டுக்குள்ள இப்படி ஒரு டிரஸ்சை போட்டுகிட்டு என்ன பண்றாங்க நந்திதா ஸ்வேதா ?

நல்ல நடிப்பாற்றல் கொண்ட நடிகை நந்திதா ஸ்வேதா(Nandita Swetha)ஆனால், தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால், இப்போது தெலுங்கில் அதிகமான படங்களில் இவர் நடித்து வருகிறார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’ என்ற படத்தில் அறிமுகமானதால், நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு ‘அட்டக்கத்தி’ நந்திதா என்ற அடைமொழி, ஆரம்பத்தில் அடையாளமாக அமைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தினேஷ். இதற்கு முன்பே, 2008 ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான, நந்தா லவ்ஸ் நந்தினி என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார்.

#image_title

ஆனால், தமிழில் அறிமுகமாகி, இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது அட்டக்கத்தி படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய படம் என்பதால், படத்தின் கதையம்சமும், சுவாரசியமான காட்சிகளும் நல்ல கவனத்தை நந்திதாவுக்கு பெற்றுத் தந்தது. இந்த படத்தில்தான் இப்போது, முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் நந்திதா நடித்த எதிர்நீச்சல் படம், பலத்த பாராட்டைப் பெற்றது. அதில், ரன்னிங் ரேஸ் ஓடும் சிவகார்த்திகேயனுக்கு, கடுமையான பயிற்சி தரும் பயிற்சியாளராக நந்திதா நடித்திருப்பார். காதலிக்காக போராடும் சிவகார்த்திகேயன் கடைசியில் போட்டியில் வெற்றி பெறுவார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது.

#image_title

நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சுமார் மூஞ்சி குமாராகவும், அமுதாவும் இருவருக்கும் நல்ல புகழை இந்த படம் தேடித்தந்தது. இதில் விரட்டி விரட்டி காதலிக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பும், அவரது தொல்லையால் டென்சனாகி கத்தும் நந்திதாவின் நடிப்பும், ரசிகர்களுக்கு விருந்து போன்ற காமெடி படமாக அமைந்தது.

தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன், திருப்பூரை சேர்ந்த இயக்குநர் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி படம், முழுக்க முழுக்க கிராமிய நகைச்சுவை படமாக, பெரிய வெற்றியை பெற்றது. நானும் நந்தினியும், புலி, உப்புக்கருவாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்த நந்திதா, இப்போது தமிழ் படங்களில் காண முடியவில்லை. தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

--Advertisement--

#image_title

தமிழ் படங்களில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு படங்களில் வழக்கம்போல கவர்ச்சி காட்டும் கதாநாயகியாக மாறி விட்டார். இதனால்தான், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

அங்காடித் தெரு, தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்த அஞ்சலி, தெலுங்கு மொழி படங்களில் நடித்த பின், தமிழில் ஐட்டம் சாங் நடிகையாக மாறி, சிங்கம் 3 படத்தில் குத்தாட்டம் போட்டது கவனிக்கத்தக்கது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை தனக்கு ஏற்படாமல் தவிர்க்க, இப்போதே சுதாரித்துக்கொண்டு அதற்கேற்ப நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க, நந்திதா முன்வர வேண்டும்.

#image_title

குடும்பப் பாங்கான படங்களில் தமிழில் நடித்த நந்திதா, இப்போது தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக மாறி விட்டதால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார். இப்போது, நடுக்காட்டுக்குள் ரொம்ப செக்ஸியாக டிரஸ்சில் காட்சியளிக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் நந்திதா ஸ்வேதா. இந்த படங்களை ரசித்து பார்த்து பெருமூச்சுவிடும் ரசிகர்கள், தெலுங்கு போன நந்திதா, இந்த ரேஞ்சுக்கு மாறி விட்டாரே? என்ற அதிர்ச்சியில் உள்ளனர்.